ஏலச்சீட்டு போட்டு ஏமாந்த இருவர் தீக்குளிக்க முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏலச்சீட்டு போட்டு ஏமாந்த இருவர் தீக்குளிக்க முயற்சி

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சேலம்: சேலம் மாவட்டம், ஓமலுார் அடுத்த தாத்தையங்கார்பட்டி, செங்கரடு பகுதியை சேர்ந்த பலர், ஏலச்சீட்டு மோசடி தொடர்பாக, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளிக்க வந்தனர்.அவர்களில், 48 - 55 வயதுள்ள இரு பெண்கள் திடீரென தங்கள் மீது, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து மீட்டனர். பின், பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:சேனைகவுண்டனுாரை சேர்ந்த சக்தி, 38, என்பவன், 50 ஆயிரம் ரூபாய் முதல், 5 லட்சம் ரூபாய் வரை, மாத ஏலச்சீட்டு நடத்தி வந்தான். அவனிடம், பலர் ஏலச்சீட்டில் சேர்ந்து, மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தோம். அவனுக்கு கிருஷ்ணன், 51, என்பவன் உடந்தையாக இருந்தான். ஏலச்சீட்டு முதிர்வு பெற்றும், உறுப்பினர்களுக்கு பணம் வழங்கவில்லை. பணம் வசூலாகவில்லையென கூறி, காலம் கடத்தி வந்தான்.தற்போது, பணம் தர முடியாது; எங்கு புகார் கொடுத்தாலும் என்னை எதுவும் செய்ய முடியாது என, மிரட்டுகிறான். இது குறித்து, ஜன., 25ல், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தோம். விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, கருப்பூர் போலீசாருக்கு உத்தரவிட்டும், அவர்கள் மனுவை கிடப்பில் போட்டுவிட்டனர். எனவே, பாதிக்கப்பட்ட நாங்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.



வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-பிப்-201903:04:43 IST Report Abuse
Bhaskaran சீட்டுப்போடும்போது யாரைக்கேட்டு போட்டீர்கள் அம்மா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X