இலங்கை அகதிகள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இலங்கை அகதிகள் கைது

Added : பிப் 11, 2019
Advertisement

ராமேஸ்வரம்: இலங்கை கிளிநொச்சியில் இருந்து அகதியாக வந்த கணேஷ் 60, இவரது மனைவி சோமாலை 65, மகள்கள் குமுதினி 31, மலர் 25, மகன் சேகர் 10 ஆகியோர் மதுரை ஆனைமலை முகாமில் தங்கி இருந்தனர்.மதுரையில் போதிய வருவாய் இன்றி தவித்த இவர்கள் மீண்டும் இலங்கை செல்ல முடிவு செய்து ராமேஸ்வரம் கரையூரை சேர்ந்த ஏஜென்ட் ஆனந்த் 35 என்பவரை அணுகினர். இவர்களிடம் கள்ளப்படகில் இலங்கை செல்ல தலா 25 ஆயிரம் ரூபாய் ஆனந்த் வசூலித்துள்ளார்.பின் ராமநாதபுரம் அருகே தெற்குகாட்டூரை சேர்ந்த லோகநாதன் 45 என்பவரின் ஆட்டோவில் ஏற்றி நேற்று முன்தினம் நள்ளிரவு தனுஷ்கோடி வந்தனர். அங்கு ரோந்து வந்த ராமேஸ்வரம் சுங்கத்துறையினர் அகதிகள் ஏஜன்ட் ஆட்டோ டிரைவர் ஆகிய 7 பேரையும் பிடித்து தனுஷ்கோடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அகதிகள் உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X