அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஏழைகளுக்கு மாதம் ரூ.2,000 : ராமதாஸ்

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (7)
Advertisement

சென்னை: 'ஏழை குடும்பங்களுக்கு, மாதந்தோறும், 2,000 ரூபாய் நிதியுதவி வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் தெரிவித்துஉள்ளார்.அவரது அறிக்கை:'தமிழகத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும், 60 லட்சம் குடும்பங்களுக்கு, தலா, 2,000 ரூபாய் நிதிஉதவி வழங்கப்படும்' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நலன் கருதி, அறிவிக்கப்பட்டு உள்ள இந்த திட்டம் வரவேற்கத்தக்கது. தேவையான உதவிதமிழக அரசின் இந்த நிதியுதவி, சரியான நேரத்தில் வழங்கப்படும், மிக தேவையான உதவி. அடிப்படை வருமான திட்டம் என்பது, தமிழகத்திற்கு மிகவும் தேவையான திட்டம். இதன் துவக்கமாக, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்துஉள்ள நிதியுதவி திட்டத்தை நீட்டித்து, ஏழை குடும்பங்களுக்கு, மாதந்தோறும், இந்த நிதியுதவி வழங்கப்படும் என, அறிவிக்க வேண்டும். முன்னோடி திட்டம்அவ்வாறு அறிவித்தால், அது, தமிழகத்தின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில், மிக முக்கிய மைல் கல்லாக அமையும்; இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக திகழும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
12-பிப்-201919:59:42 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj கூட்டணி உறுதியாகிவிட்ட்து போலும் ஆதரவு கரங்களை நீட்டிவிடடார் அதே நேரத்தில் சாலைகள் பொது இடங்கள் வாய்க்கால் புறம்போக்குகள் நீர் நிலை ஆதாரங்கள் என அனைத்து இடங்களிலும் ஆக்கிரமிப்பு செய்துள்ள ஏழைகளுக்கு நல்ல மாற்று இடமும் அளித்து ஆக்கிரமிப்பு இல்லா தமிழகம் என செய்திட முன்வருவீர்களா வரமாட்டீர்கள் ஏனெனில் உங்கள் கட்சி பிரமுகரே காஞ்சிபுரத்தில் பொது இடம் மற்றும் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து விதி மீறல் கட்டிடங்களை எழுப்பியுள்ளதை உங்களால் தடுக்க முடியவில்லையே
Rate this:
Share this comment
Cancel
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
12-பிப்-201919:34:59 IST Report Abuse
K. V. Ramani Rockfort நல்ல யோசனைதான், அப்படியே, வேலையின்றி தவிக்கும் ஏழை இளைஞர்களுக்கு, வீட்டுக்கு ஒருவருக்காவது வேலைவாய்ப்பு கொடுத்தல் அவசியம்.
Rate this:
Share this comment
Cancel
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
12-பிப்-201916:05:40 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj கூட்டணி உறுதியூயாகிவிட்ட்து போலும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X