4 நாட்களுக்கு லேசான மழை!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

4 நாட்களுக்கு லேசான மழை!

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: மூன்று மாதமாக நிலவிய, குளிர்காலம் முடிவுக்கு வந்ததால், லேசான மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த, 2018 நவம்பரில் துவங்கிய, குளிர்காலம், பிப்ரவரி முதல் வாரம் வரை நீடித்தது. எப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது, குளிர் குறைந்து உள்ளது.இதையடுத்து, தமிழக கடலோர பகுதிகளில், லேசான மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.அதனால், சில நாட்களாக, சில பகுதிகளில், லேசான மழை பெய்துள்ளது. நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, குழித்துறையில், 2 செ.மீ., மழை பதிவானது. ஸ்ரீவைகுண்டம், ஊட்டி, குன்னுாரில், 1 செ.மீ., மழை பெய்து உள்ளது.குன்னுார் மற்றும் வால்பாறையில், நேற்று, 1 செ.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது. வரும் நான்கு நாட்களில், தமிழகம், புதுச்சேரியில், சில இடங்களில் லேசான மழை பெய்யும் என, வானிலை மையம் தெரிவித்து உள்ளது.



வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
12-பிப்-201905:50:54 IST Report Abuse
 nicolethomson இப்பவே மழைக்காலம் ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்று மனம் ஏங்குகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X