ரபேல் விவகாரம்: சி.ஏ.ஜி., அறிக்கை இன்று தாக்கல் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரபேல் விவகாரம்: சி.ஏ.ஜி., அறிக்கை இன்று தாக்கல்

Added : பிப் 11, 2019
Advertisement

புதுடில்லி: ரபேல் போர் விமானங்கள் வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக, பார்லிமென்டில் இன்று, சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம், அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.ஐரோப்பிய நாடான, பிரான்சில் உள்ள, 'டசால்ட்' நிறுவனத்திடம் இருந்து, அதிநவீன ரபேல் போர் விமானங்கள் வாங்க, மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 'இதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலை அதிகம்; டசால்ட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக, அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் டிபென்சை, இந்த ஒப்பந்தத்தில் சேர்த்தது தவறு' என, காங்., தலைவர், ராகுல் குற்றஞ்சாட்டி வருகிறார்.இந்த விவகாரம், பார்லிமென்டில் கடும் அமளியை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, பார்லி.,யில் இன்று, சி.ஏ.ஜி., அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக, தகவல்கள் கூறுகின்றன. தற்போதைய லோக்சபாவின், கடைசி கூட்டம், நாளை முடியவுள்ள நிலையில், இன்று, சி.ஏ.ஜி., அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X