பதிவு செய்த நாள் :
உற்சாகம்!
உ.பி.,யில் தொண்டர்களை சந்தித்தார் பிரியங்கா;
லக்னோ முழுவதும் விழாவாக கொண்டாட்டம்

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதிக்கான, காங்கிரஸ் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள, காங்., தலைவர் ராகுலின் தங்கை பிரியங்கா, நேற்று அதிரடியாக களத்தில் குதித்தார். உ.பி., தலைநகர், லக்னோவின் முக்கிய சாலைகளில் ஊர்வலமாகச் சென்று மக்களை சந்தித்தார். அவரது வருகையை, காங்., தொண்டர்கள் விழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

உற்சாகம்,பிரியங்கா,லக்னோ,விழா_கொண்டாட்டம்ஏப்ரல் - மே மாதங்களில், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்கும் நோக்கில், ஆளும், பா.ஜ.,வும், எதிர்க்கட்சியான, காங்கிரசும், பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடிக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் வகையில், பிராந்திய கட்சிகளை சேர்த்து, கூட்டணி அமைக்கும் முயற்சியில், காங்., தலைவர் ராகுல் ஈடுபட்டார். ஆனால், காங்.,கை சேர்த்துக் கொள்ள, பல பிராந்திய கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றன. மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி, காங்., உடன் கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டவில்லை.


கூட்டணி:நாட்டிலேயே அதிகமாக, 80 லோக்சபா தொகுதிகள் உடைய மாநிலமான, உ.பி.,யில், முக்கிய கட்சிகளான, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகியவை, காங்.,கை சேர்க்காமல் கூட்டணி அமைத்துள்ளன.

இந்த கட்சிகள், தலா, 37 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளன. இது, மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் கனவில் உள்ள, காங்.,கிற்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாட்டின் பிற மாநிலங்களிலும் இதே நிலை காணப்படுகிறது.


இந்நிலையில், காங்., கிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் நோக்கிலும், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கும் வகையிலும், உ.பி., மாநிலத்தின் கிழக்கு பகுதிக்கான, காங்., பொதுச் செயலராக, தன் தங்கை பிரியங்காவை, ராகுல், சமீபத்தில் நியமித்தார். இதையடுத்து, உ.பி., யின் கிழக்கு பகுதிகளில் சுற்றுப்பயணம் சென்று, மக்களை, கட்சி தொண்டர்களை சந்திக்க பிரியங்கா, 47, முடிவு செய்தார்.


இது தொடர்பாக, நேற்று முன்தினம், பிரியங்கா வெளியிட்ட செய்தியில், 'மக்கள் அனைவரும் வாருங்கள்; புதிய எதிர்காலத்தை, அரசியலை கட்டமைக்க, என்னுடன் கைகோருங்கள்' என, கூறியிருந்தார். அவரது வருகையையொட்டி, லக்னோ உள்ளிட்ட நகரங்களில், அவரை வரவேற்க, காங்., தொண்டர்கள் விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


இதைத் தொடர்ந்து நேற்று, உ.பி., மாநிலம், லக்னோவுக்கு சென்ற பிரியங்காவுக்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். பிரியங்காவின் வருகையை, விழாவாக அவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.


மக்களிடம் பேச்சு:லக்னோ விமான நிலையம் முதல், 25 கி.மீ., வரை, முக்கிய சாலைகளில், பஸ் மீது ஊர்வலமாக சென்ற பிரியங்கா, இரு புறமும் திரண்டிருந்த மக்களை நோக்கி கையசைத்தபடி சென்றார். பல இடங்களில், வாகனத்தில் இருந்தபடி மக்களிடம்

Advertisement

பேசி, அவர்களின் ஆதரவை கோரினார். அப்போது, காங்., தொண்டர்கள், பிரியங்கா மீது, மலர்களை துாவி வாழ்த்து தெரிவித்தனர். சாலையில் திரண்டிருந்த மக்களும், தொண்டர்களும், பிரியங்காவை புகைப்படம் எடுத்தனர்.


பல இடங்களில், பிரியங்காவை, சிங்கத்தின் மீது அமர்ந்துள்ள துர்கா தேவியாக சித்தரித்து போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. பிரியங்கா பயணித்த அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், அவருடன், காங்., தலைவர் ராகுல், உ.பி., மாநில, மேற்கு பகுதி, காங்., பொதுச் செயலர் ஜோதிராதித்ய சிந்தியா சென்றனர்.

'டுவிட்டரில்' பிரியங்கா:

தீவிர அரசியலில் களமிறங்கியுள்ள, காங்., பொதுச்செயலர் பிரியங்கா, 'டுவிட்டர்' சமூக வலைதளத்திலும் சேர்ந்துள்ளார். டுவிட்டர் சமூக வலைதளத்தில், நேற்று காலை, 11:49 மணிக்கு சேர்ந்த சில நிமிடங்களில், ஆயிரக்கணக்கானோர், பிரியங்காவை பின்தொடர்ந்தனர். ஒரு மணி நேரத்தில், பிரியங்காவை பின்தொடர்வோர் எண்ணிக்கை, 25 ஆயிரமாக உயர்ந்தது. டுவிட்டரில், இதுவரை எந்த பதிவையும் பிரியங்கா வெளியிடவில்லை.பா.ஜ., - எம்.பி.,க்கு கண்டனம்:

உ.பி., மாநிலம், பாஸ்தி தொகுதி, பா.ஜ., - எம்.பி., ஹரிஷ் திவிவேதி பேசிய, 'வீடியோ' நேற்று முன்தினம் வெளியானது. அதில், 'டில்லியில் இருக்கும் போது, ஜீன்ஸ், டாப் போன்ற ஆடைகளை, பிரியங்கா அணிகிறார். உ.பி.,க்கு வந்தால், புடவை அணிந்து, நெற்றியில் பொட்டு இட்டு, தன்னை மாற்றிக் கொள்கிறார்' என, அவர் கூறியிருந்தார். இதற்கு, காங்., தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்., மூத்த தலைவர் வீரப்ப மொய்லி கூறுகையில், ''பெண்களை பாலியல் ரீதியில் வர்ணிக்கும் தவறை, பா.ஜ., - எம்.பி.,க்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். அவர்களது குறுகிய மனப்பான்மையை, இது பிரதிபலிக்கிறது,'' என்றார். மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி கூறுகையில், ''ஒரு பெண், எதை அணிய வேண்டும் என்பது, அவரது சொந்த விருப்பம். இதில், யாரும் தலையிட உரிமை கிடையாது,'' என்றார்.Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-பிப்-201916:36:53 IST Report Abuse

Pugazh Vஇந்து வேடம் போட்டு திரிவது இவர்கள் அல்ல. உங்கள் கட்சி அமித்ஷா தான். அவர் ஹிந்து அல்ல என்பது இங்கே க.எழுதும் வாசகர்களில் பெரும்பாலானவர்களுக்கு தெரயாது. "ஹிந்துக்கள்" என்று மதவாதம் எழுதுபவர்கள் ஹிந்து அல்லாத ஒருவரின் கீழ் இயங்குவதும் பிறரையும் ஆதரிக்கச் சொல்வதும் முரண்பாடு இல்லை யா?

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-பிப்-201913:24:51 IST Report Abuse

Pugazh Vஆமாம்.. பிற கட்சி தலைவர்கள் யாரும் தொண்டர்களை சந்திக்க கூடாது. மாநிலம் மாநில மாக சென்று பிரச்சாரம் பண்ணக் கூடாது. அப்படி பண்ணினால் குய்யோமுறையோ என்று கத்துவார்கள். இதற்கு பெயர் அரசியல் கருத்துகளாம்

Rate this:
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
12-பிப்-201913:09:27 IST Report Abuse

R.MURALIKRISHNANநடிகைகள் சினிமாவில் நடிக்கிரார்கள்.இந்த பெண்மணி total இந்தியாவில் கட்சியில் சேர்ந்து நடிக்கிறார்

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X