ஏலம் போகாத ஹிட்லரின் ஓவியம்

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement

பெர்லின்: ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரியான ஹிட்லரின் ஓவியம் விலை போகாததது அந்நாட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.ஜெர்மனி நாட்டில் சர்வாதிகாரியாக விளங்கியவர் அடால்ப் ஹிட்லர். யூதர்களை கூட்டம் கூட்டமாக அழித்து இனப்படுகொலை செய்தவர். இவர் கொடூர மனம் கொண்டவராக இருந்தாலும் மிகச் சிறந்த ஓவியர். சாதாரண ராணுவ வீரராக இருந்த காலத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார்.இரண்டாம் உலகப் போரில் தோல்வியுற்றதால் தற்கொலை செய்து இறந்து போனார். அவரது ஓவியங்கள் அவ்வப்போது உலகின் பல்வேறு இடங்களில் பிரபல ஏல நிறுவனங்களால் ஏலம் விடப்படும். சமீபத்தில் ஜெர்மனியில் உள்ள நுரம்பெர்க் நகரில் ஹிட்லரின் ஓவியம் ஏலம் விடப்பட்ட போது அந்த ஓவியத்தை யாரும் ஏலம் எடுக்கவில்லை.இதுகுறித்து ஜெர்மனி பத்திரிகைகள் 'அந்த ஓவியத்தின் ஆரம்ப விலையே 21500 டாலர். அதனால் தான் அந்த ஓவியம் விலை போகவில்லை' என்றும்'ஹிட்லரின் ஓவியங்கள் என்ற பெயரில் போலிகள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன என்ற செய்தி பரவியதன் காரணமாக இந்த ஓவியம் விலைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை' என்றும் செய்திகள் வெளியிட்டுஉள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-பிப்-201900:17:10 IST Report Abuse
கதை சொல்லி அவருக்கு நம்ம கொல்கத்தா மம்தாவை போல் ஓவியம் தீட்ட தெரிந்திருக்காது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X