மரித்துப்போன மனிதாபிமானம்

Updated : பிப் 14, 2019 | Added : பிப் 11, 2019
Advertisement
ப்பப்பா... டிராபிக் ஜாமில் சிக்கி படாதபாடு பட்டுட்டேன். என்.எச்., ரோட்டிலிருந்து வெளியே வர்றதுக்கு, ஒரு மணி நேரம் ஆயிடுச்சுன்னா, பாரேன்,'' என்று பேசியவாறு, மித்ராவின், வீட்டுக்குள் வந்தாள் சித்ரா.''என்னக்கா... வரும் போது புலம்பிட்டே வர்றீங்க? மொதலில் உட்காருங்க. டீயை குடிங்க. அப்புறம் பேசலாம்,'' என்றவாறு, டீ கொடுத்தாள் மித்ரா.''ஏன்.. மித்து.. அரசுக்கு எதிரா போராட்டம்
மரித்துப்போன மனிதாபிமானம்

ப்பப்பா... டிராபிக் ஜாமில் சிக்கி படாதபாடு பட்டுட்டேன். என்.எச்., ரோட்டிலிருந்து வெளியே வர்றதுக்கு, ஒரு மணி நேரம் ஆயிடுச்சுன்னா, பாரேன்,'' என்று பேசியவாறு, மித்ராவின், வீட்டுக்குள் வந்தாள் சித்ரா.''என்னக்கா... வரும் போது புலம்பிட்டே வர்றீங்க? மொதலில் உட்காருங்க. டீயை குடிங்க. அப்புறம் பேசலாம்,'' என்றவாறு, டீ கொடுத்தாள் மித்ரா.''ஏன்.. மித்து.. அரசுக்கு எதிரா போராட்டம் நடத்த ஆதரவு திரட்டறாங்க. ஆனா, மாநகராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்த்துட்டே இருந்துதாம்,''''ஆமாங்க்கா. எதிர்க்காம இருந்தா ஆதரிக்கறாங்கன்னுதானே அர்த்தம்.


நஞ்சப்பா பள்ளி வளாகத்தில், தினமும், ஆயிரக்கணக்கான மக்கள், 'வாக்கிங்' போறாங்க. அதனால, எந்த போராட்டமா இருந்தாலும், அங்க போயித்தான், ஈஸியா 'கேன்வாஸ்' பண்றாங்க''''திருப்பூருக்கு வந்த மோடிக்கு கறுப்பு கொடி காட்டறம.தி.மு.க., போராட்டத்துக்கு, அடிச்ச நோட்டீஸ், நஞ்சப்பா ஸ்கூலில், வாக்கிங்போறவங்ககிட்ட கொடுத்து ஆதரவு கேட்டிருக்காங்க''''இதில், என்ன கொடுமைன்னு கேட்டீங்கன்னா. இந்த தகவல் உளவுத்துறை போலீசுக்கு தெரியலையாம். ஆனா, மாநக ராட்சி நிர்வாகத்துக்கு தெரிஞ்சும் கூட, கண்டுக்கவே இல்லையாம்,''''அதுக்கு ஏதாவது காரணம் வெச்சிருப்பாங்க. நேரம் வரும் போது, கவனிச்சுப்பாங்கன்னு நினைக்கிறேன்,''டேபிளில் இருந்த பேப்பரை புரட்டி கொண்டு வந்த மித்ரா, ''வர...வர... மனிதாபிமானமே பார்க்க மாட்டேங்குறாங்க,'' என்றாள்.''எதை வைச்சு சொல்றடி,''''அக்கா.. மாற்றுத்திறனாளிங்க, வாரவாரம், வெள்ளிக்கிழமை அரசு மருத்துவமனையில நடக்கற முகாமுக்கு போயி, பரிசோதனை செஞ்சு, ஊனம் இவ்வளவு பர்சென்ட்டுனு டாக்டர் சர்டிபிகேட் கொடுக்கறாங்க. அப்பதான், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உதவி வழங்க முடியும்''''போன மாசத்துல, ரெண்டு கால்களும் இல்லாத ஒரு மாற்றுத்திறனாளி, டாக்டர்கிட்ட 'சர்டிபிகேட்' வாங்க போயிருக்காரு.
அங்கிருந்த டாக்டர், மொபைல் போனில் நோண்டிகிட்டே, தற்காலிக ஊனம்னு எழுதி, கம்மியான பர்சன்ட்டேஜ் போட்டு கொடுத்திருக்காரு,''''ரெண்டு காலும் போயிடுச்சு. 'தற்காலிக ஊனமுன்னு,' 'சர்டிபிகேட்' கொடுக்கறாங்களே'ன்னு கலெக்டர் ஆபீசுல போயி, அழுது வேதனைப்பட்டாராம்,'' என்று ஆதங்கப்பட்டாள் மித்ரா.
''இந்த மாதிரியான நபர்களால்தான், பிரச்னையே வருது. டியூட்டியில் இருக்கிற கொஞ்ச நேரமும், ஒழுங்கா வேலை பார்த்தா, என்ன குறைஞ்சு போயிடுவாங்க. இந்த விஷயத்தில், நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இந்த மாதிரி இனிமே நடக்காது. நீ என்ன சொல்றே மித்து?''''100 பர்சென்ட் உண்மைங்க்கா...'' என்ற மித்ரா, ''ஏக்கா... லோக்சபா தேர்தல் பத்தி ஏதாவது நியூஸ் இருக்கா?''''ஏன்... இல்லாம. மூணு வருஷத்துக்கு மேல, ஒரு இடத்துல பணியாற்றிய, தேர்தல் வேலை பார்க்கற அதிகாரிங்க டிரான்ஸ்பர் செய்யுங்கன்னு, தேர்தல் கமிஷன் சொல்லிட்டாங்க. அதற்கான, லிஸ்ட்டும், போன மாசத்துலயே ரெடியாயிடுச்சாம்,''''அதில், கலெக்டருக்கு அடுத்த ஸ்டேஜில் இருக்கற, இரண்டு அதிகாரிங்களும் 'டிரான்ஸ்பர்' ஆகறது உறுதியாயிருச்சு''''பக்கத்து மாவட்டத்துக்கு தானே போகப்போறாங்க... இருந்தாலும் ரெவின்யூவிலிருந்தே வேறு 'டிபார்ட்மென்ட்'டுக்கு போகப்போறாங்கனு பேசிக்கறாங்க. யார் என்ன பேசினா லும், ரொம்ப நாள் தாசில்தாரா இருக்கற இரண்டு பேரையும் ஒண்ணும் பண்ண முடியாதாம். அந்தளவுக்கு, அவங்களுக்கு 'பவர்' இருக்காம். அதேமாதிரி, பி.டி.ஓ., ஆபீசில் உள்ளோரையும் கவனிச்சா பரவாயில்லை,'' என்று விளக்கினாள் சித்ரா.'ஏக்கா... மோடி மீட்டிங்க்கு பின்னாடி, பி.ஜே.பி., காரங்க உற்சாகமாயிட்டாங்களாம்,'''அட.. நீ.. வேற. அவங்களை விட, அ.தி.மு.க., காரங்கதான், ரொம்பவே குஷியாயிட்டாங். இதில் ஒரு விஷயம் என்னன்னா..
தாயும், மகளும் போல,பி.ஜே.பி.,யில் இருக்கற ரெண்டுபேர், கோவை, திருப்பூரில் நிற்கறதா பேச்சு அடிபடுது. அதனால, இந்த இரண்டு தொகுதியும் கண்டிப்பாக வேணும்னு, மேல வரைக்கும் சொல்லிட்டாங்களாம்,''''ஓ... அதுதானே கேட்டேன். அப்ப, சிட்டிங் எம்.பி., யும் 'சீட்' கேட்டு தீவிரமாக இருக்காங்களே,''''இல்லையில்லை. அவங்களுக்கு சட்டமன்றத்தில் பார்த்துக்கலாமுன்னு, சமாதானம் சொல்லியிருக்காங்களாம்,''சித்ரா சொன்னதும், மித்ராவின் அம்மா, கறுப்பு நிறத்தில் ஒரு துணியை எடுத்து சென்றார்.அதைப்பார்த்த மித்ரா, ''கறுப்பு கொடி காட்டற போராட்டத்தில், ஏதாவது விசேஷம் இருக்குதாக்கா?'' என்றாள்.''ஆமாண்டி. ஒரு மணி நேரம் பேசினதுக்கு அப்புறம், அரெஸ்ட் பண்ணாலாம்னு போலீஸ்காரங்க போயிருக்காங்க. வழக்கம்போல, டென்ஷனான அவர், 'நாங்க என்ன ரகளையா செஞ்சோம்; ஏன் கைது செய்றீங்கன்னு,' அதிகாரிகிட்ட காட்டமா பேசியிருக்காரு''''அதுக்கு முன்னாடி, மைக்கில், ஆளுங்கட்சிக்காக வேலை பார்க்கற 'லேடி ஆபீசர்', 'லேடி ஆபீசர்'னு, பல தடவ கோவத்தில் பேசிட்டே இருந்தாராம். இதைக்கேட்டு ரொம்ப நேரமா, சகிச்சுட்டு நின்னுட்டிருந்த, போலீஸ் பொறுமையிழந்து போனதுக்குத்தான் வசை பாடினாராம். அப்புறம் ஒரு வழியா, அரெஸ்ட் பண்ணி வேனில் ஏத்துனாங்களாம்,'' என்றாள் சித்ரா.பேச்சு சுவாரசியத்தில், மித்ராவின் மொபைல் போன் ஒலித்தது. ''சொல்லுங்க.. டீச்சர். நல்லாயிருக்காங்களே. சரிங்க டீச்சர். அம்மாகிட்ட சொல்லிடறேன்'' என்றவாறு இணைப்பை துண்டித்தாள்.''டீச்சருன்னு சொன்னதும், சம்பள விஷயம் நினைவுக்கு வந்திடுச்சு. 'ஜாக்டோ-ஜியோ' ஸ்டிரைக்கால், அரசு ஊழியருக்கும், ஆசிரியர்களுக்கு இந்த மாசம் சம்பளம் லேட்டாம்,''''என்னதான், பில்.. லேட்டா போட்டாலும்கூட டிரஸரி ஊழியர்கள், வழக்கம் போல் சம்பளம் வழங்குவதில் தாமதம் செய்தனர்.
வழக்கமாக அட்வான்ஸ், லோன், பி.எப்.,லோன்னு, போனால், 'கமிஷன்' வெட்டினால்தான் பைல் நகருமாம். இப்படி கமிஷன் தராத சில துறை அலுவலகங்களுக்கு, இன்னமும் சம்பள பில் பாஸ் ஆகலையாம்,'' என்றாள் சித்ரா.''வேலை நிறுத்த போராட்டம் காரணமாக போலீஸ் வாட்ஸ் ஆப் குரூப்பை கலைச்சுட்டாங்க தெரியுமா' என்றாள் சித்ரா.மொபைல் போனில், 'வாட்ஸ் அப்' மெசேஜ் பார்த்து கொண்டே இருந்த மித்ரா, திடீரென்று, ''போலீஸ்காரங்க, வாட்ஸ் அப் குரூப்பை கலைச்சுட்டாங்களாம்,''''எங்கடி?''''காங்கயத்தில், சப்-டிவிஷன் போலீஸ்காரங்க ஒண்ணா சேர்ந்து, ஒரு 'வாட்ஸ்ஆப்' குரூப் வச்சிருந்தாங்க. 'ஜாக்டோ-ஜியோ' ஸ்டிரைக் நடந்தப்ப, போலீஸ்காரர் ஒருவர், போராட்டத்துக்கு ஆதரவாக நாமும் இதில் பங்கேற்க வேண்டும்,' என்று ஒரு தகவல் பதிவிட்டாராம்.
இதுபத்தி தெரிஞ்ச பெரிய அதிகாரி, சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை போட்டு டோஸ் விட்டாராம். போதுமடா சாமின்னு, குரூப்பையே கலைச்சுட்டாங்களாம்,'' என்று கூறி சிரித்தாள் மித்ரா.'மித்து... ஒரு போர்டு வைக்க, 55 ஆயிரம் ஆகுமா?''''எதைப்பத்தி சொல்றீங்கன்னு தெரியலையே''''அட... எல்லா ஊராட்சிகளிலும், வளர்ச்சி திட்டம், பயனாளிகள் உள்ளிட்ட விவரங்கள் கொண்ட விளம்பர போர்டு வைச்சிருக்காங்க.
அந்த போர்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் கூட ஆகாதாம். ஆனால், 55 ஆயிரம் ரூபாய் பில் போட்டிருக்காம். மாவட்டத்துல இருக்குற எல்லா ஊராட்சிக்கும் கணக்கு போட்டால் தலையே சுத்துதுடி,''என்றாள் சித்ரா.'அதிகாரிகள் காட்டுல மழை தட்டியெடுக்குதுன்னு சொல்லு' என்றாள் மித்ரா.''இந்த விஷயத்தை, கலெக்டர்தான் கேட்கோணும். அப்பதான், உண்மை வெளியே வரும்,'' என்ற மித்ரா, 'காங்., கட்சியின் புதிய தலைவர், ஸ்டாலினுடன் சந்திப்பு,' என்ற செய்தியை சத்தமாக படித்தாள்.''அட.. இருடி... காங்கிரசை பத்தி ஒரு நியூஸ். திருப்பூரில், இளங்கோவன் கோஷ்டி வலுவாக உள்ள நிலையில், அழகிரி நியமனம் அவங்களை, கொந்தளிக்க வச்சிருச்சாம்.
இத்தனைக்கும், தன்னோட ஆதரவாளர் ஒருவருக்கு உடம்பு சரியில்லைன்னு திருப்பூருக்கு வந்த இளங்கோவன், சத்தமில்லாமல் வந்துட்டு போயிட்டார். இதுக்கு முன்னாடி எப்ப வந்தாலும் பேட்டி கொடுப்பாராம். இந்தவாட்டி, அதுவும் இல்லையாம்,''''ஆமாக்கா... மாற்றத்தை ஏத்துக்கறதுதானே புத்திசாலித்தனம்,'' என்றாள் மித்ரா.''ரொம்ப பெரிய மனுஷியாட்டம் பேசாதே. டாக்டரோட மனிதாபிமானமற்ற நடவடிக்கையை பேசினோமோ. அதேமாதிரி, ஒரு இன்ஸ்பெக்டர் செஞ்ச வேலையை கேளு,''''ஏக்கா... என்னாச்சு?''''கே.வி.ஆர்., நகர் பக்கத்தில, தனியார் பள்ளி பஸ் ஒன்று, ஒருவர் மீது மோதிவிட்டது. காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் இறந்துட்டார். அவர் ரோட்டோரம் தங்கியிருந்தவர் என்பதால், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதுன்னு கேஸ் போட்டுட்டாங்க,''''இதை கேள்விப்பட்ட அதிகாரி, ஸ்டேஷன் அதிகாரியை வெளுத்து வாங்கிட்டாராம்.
அதனால, உண்மையாக நடந்த சம்பவத்தை எப்.ஐ.ஆர்., போட்டு இருக்காங்க. இறந்தவருக்கு யாருமில்லைங்கிற தைரியத்தில, கொஞ்சம்கூட மனிதாபிமானம் இல்லாமல், நடந்துட்டாங்கன்னு, தகவல் தெரிஞ்சவங்க பேசிக்கறாங்களாம்டி,''''ரொம்ப கொடுமைங்க்கா... 'சாலை'யில் என்ன நடந்ததோ, அதை அப்டியே 'எப்.ஐ.ஆர்.,' போடற 'சக்தி'தான் இருக்கிறதே. இல்லைன்னா, 'ராம்... ராம்...'ன்னு, சொல்ல வேண்டிய காலம் வந்துடுமுன்னு, அந்த அதிகாரிக்கு தெரியாதா என்ன?'' என்றாள் மித்ரா.''இப்ப எல்லாம், மனிதாபிமானங்கிறது மேடைப்பேச்சாதாண்டி இருக்குது.
இப்பப்பாரு, வைகோ ஆர்ப்பாட்டத்தில்,பி.ஜே.பி,. லேடி நிர்வாகி மீது, ம.தி.மு.க., தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதில், பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்க. அவங்க மேலயே, 'நார்த்' ஸ்டேஷ னில், கேஸூம் போட்டுட்டாங்க. இதையெல்லாம், எங்கே போய் சொல்றதுன்னு, தொண்டர்கள் புலம்பறாங்களாம்,'' என்று சொன்ன சித்ரா, ''சரிப்பா.. நான் கெளம்பறேன்,'' என்று எழுந்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X