பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் தொடரும்;
உலகில், 2வது இடத்தை பிடிக்கும்:
பிரதமர் மோடி நம்பிக்கை

கிரேட்டர் நொய்டா: '' இந்தியா, வேகமான பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் நாடாக, தொடர்ந்து விளங்கும். வரும், 2030ல், உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக உயரும்,'' என, பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

India,Modi,Narendra modi,இந்தியா,நரேந்திர மோடி,மோடி


உ.பி., மாநிலம், கிரேட்டர் நொய்டாவில், சர்வதேச பெட்ரோலிய தொழில்நுட்ப மாநாட்டில், மோடி பேசியதாவது: அடுத்து வரும் ஆண்டு களில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடரும் என, பன்னாட்டு நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச முன்னணி நிதி அமைப்புகள் தெரிவித்துள்ளன.

சர்வதேச அளவில், பொருளாதார சூழல் நிலையின்றி ஸ்திரமற்று காணப்படுகிறது. ஆனால், இந்தியா, பொருளாதார மந்தநிலையை வெற்றிகரமாக சமாளித்து, மிகச் சிறப்பான எழுச்சியை கண்டு வருகிறது. சர்வதேச பொருளாதார மீட்சியில், அச்சாணியாக திகழ்கிறது. உலகில், வேகமாக வளர்ந்து வரும் மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது.

கச்சா எண்ணெய்:


உலகின், மிகப் பெரிய பொருளாதார நாடுகளில், இந்தியா, தற்போது, ஆறாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. வரும், 2030ல்,

இரண்டாவது இடத்தை பிடிக்கும் என, சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கச்சா எண்ணெய் விலை, உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோரின் பரஸ்பர நலன் சார்ந்து, நியாயமான முறையில் நிர்ணயிக்கப்பட வேண்டும். எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில், வெளிப்படையான அதேசமயம் வளைந்து கொடுக்கும் சந்தையை நோக்கி நாம் நகர வேண்டும். அப்போது தான், உலகின் எரிசக்தி தேவைகளுக்கு, அதிகபட்ச சேவையை வழங்க முடியும்.

பாரீஸ் பருவநிலை மாநாட்டு இலக்கை எட்ட, இந்தியா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த இலக்கு எட்டப்படும். உலகளவில், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறனில், இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. இது, மேலும் அதிகரித்து, 2030ல், 20 கோடி டன்னாக உயரும். கடந்த ஆண்டு, தேசிய உயிரி எரிபொருள் கொள்கை அறிமுகமானது.

அடுத்து, இரண்டு மற்றும் மூன்றாவது தலைமுறைக்கான உயிரி எரிபொருள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. மேலும், 11 மாநிலங்களில், இரண்டாம் தலைமுறை உயிரி எரிபொருள் சுத்திகரிப்பிற்காக, 12 நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. எரிசக்தி கொள்கை நியாயமானதாக இருக்க வேண்டும். இந்தியாவும் அதைத்தான் விரும்புகிறது. இதையொட்டி, ஏராளமான கொள்கை திட்டங்கள் உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்படுகின்றன.

மின்சாரம்:


தற்போது, அவற்றினால் கிடைத்த பயன் தெளிவாக தெரிகிறது. அனைத்து கிராமப்புற பகுதிகளுக்கும், மின்சார வசதி கிடைத்துள்ளது. இந்தாண்டு, 'சவுபாக்யா' திட்டம் மூலம்,

Advertisement

இந்திய குடும்பங்களில், 100 சதவீத மின் வசதி அளிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தியை அதிகரிக்கும் போது, மின் வினியோகம் மற்றும் பகிர்வின் போது ஏற்படும் இழப்பை குறைக்கவும் முயற்சித்து வருகிறோம்.

இதற்காக, மத்திய அரசு, 'உதய்' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மின்வசதி விரைவாகவும், சுலபமாகவும் கிடைக்கும் நாடுகளின் பட்டியலில், 2014ல், இந்தியா, 111வது இடத்தில் இருந்தது. கடந்த ஆண்டு, 29வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக, உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சமையலறை புகை பாதிப்பில் இருந்து, குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளை காக்க, இலவச காஸ் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் இதுவரை, 6.40 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயன் அடைந்துள்ளன. மத்திய அரசின் மின் சிக்கன திட்டங்கள் மூலம், கணிசமான சேமிப்பு கிட்டியுள்ளது. மின்சேமிப்பிற்கான, 'உஜாலா' திட்டத்தில், நாடு முழுவதும், 'எல்.இ.டி., ' பல்புகள் வழங்கப்பட்டன. இதன் மூலம், ஆண்டுக்கு, 17ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது.

-பிரதமர் மோடி


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Silambu Arasan - dharmapurl,இந்தியா
12-பிப்-201917:14:16 IST Report Abuse

Silambu Arasanநல்ல வளர்ச்சி, ஒரு 15000 ரூபாய் ATM -ல எடுக்கமுடியல இதுல இன்னும் வேகமா வளர்ச்சிவேற......

Rate this:
Gideon Jebamani - Yonkers,யூ.எஸ்.ஏ
12-பிப்-201913:43:18 IST Report Abuse

Gideon JebamaniWho harvest this economic growth? Unemployment crisis rampant every where. For 50 sanitation job 5 thousands candidates apply. This breeds uning corruption and nepotism. Economic growth should be focused for equal opportunity.

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
12-பிப்-201912:00:12 IST Report Abuse

ganapati sbதற்போது tneb யிலேயே 60 ரூபாயில் கிடைக்கும் led bulb மூலம் எனது வீட்டிலும் மின்சார பயன்பாட்டு செலவு குறைந்துள்ளது செயற்புயல் மோடிக்கு பாராட்டுக்கள்

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X