திருமணமான மூன்றே நிமிடத்தில் விவாகரத்து| Dinamalar

திருமணமான மூன்றே நிமிடத்தில் விவாகரத்து

Updated : பிப் 11, 2019 | Added : பிப் 11, 2019 | கருத்துகள் (44)
Advertisement

குவைத்: குவைத் நாட்டில் திருமணமான மூன்றே நிமிடத்தில் புதுமண தம்பதியர் விவாகரத்து பெற்றது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.



திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்லப்பட்ட காலங்கள் போய் சில மாதங்கள் சில ஆண்டுகளிலேயே திருமண உறவு முறிந்து போகும் கால கட்டம் இது என்றாலும் திருமணம் ஆன சில நிமிடத்தில் விவாகரத்து என்பது நாம் கேள்விப்படாத ஒன்று.சமீபத்தில் குவைத்தில் ஒரு இளம் ஜோடி நீதிபதியின் முன் பதிவுத் திருமணம் செய்தனர். திருமணமான அடுத்த நொடி திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபத்தில் கணவர் மனைவியை 'முட்டாள்' என்று திட்டவே ஆத்திரமடைந்த மனைவி திருமணத்தை நடத்தி வைத்த நீதிபதியிடம் 'இந்த திருமணத்தை ரத்து செய்யுங்கள்' என்று கூறியுள்ளார். இதனால் திருமணமான 3 நிமிடங்களில் அவர்களது திருமண ஒப்பந்தம் முறிக்கப்பட்டு விவாகரத்து அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவம் குவைத் வரலாற்றில் இதுதான் முதல் முறை.



இதனிடையே அப்பெண்ணுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ''ஆரம்பத்திலேயே கணவன் இப்படி நடந்துகொண்டால் நாட்கள் செல்லச்செல்ல இன்னும் மோசமாகிவிடும். அவரை விட்டுப் பிரிந்ததே நல்லது'' என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.மற்றொரு நெட்டிசன் ''சின்னச் சின்ன விஷயங்களைக் கூட அனுசரித்துப் போகாவிட்டால் யாருக்குமே திருமண பந்தம் நிலைக்காது'' என்று தெரிவித்துள்ளார்

Advertisement


வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
13-பிப்-201903:52:12 IST Report Abuse
meenakshisundaram அது சரி ,நாட்டுக்கு நாடு கலாச்சாரம் வேறு படுமாமே இது ரொம்ப புதுசா இருக்கே? இப்படி உள்ள ஒரு நாடு தேவையா?
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
12-பிப்-201914:20:08 IST Report Abuse
raghavan பந்திக்கு முந்தினவன் பாக்கியவான்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
12-பிப்-201914:04:22 IST Report Abuse
Bhaskaran இன்னைக்குத்தான்யா ரஜனி வீட்டில் ஒரு கல்யாணம் நடக்குது இப்போதான் இந்த செய்தியை பெருசா போடணுமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X