கம்பளி ஆடை தயாரிப்பு வரும் 15ல் கருத்தரங்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கம்பளி ஆடை தயாரிப்பு வரும் 15ல் கருத்தரங்கு

Added : பிப் 11, 2019
Advertisement

திருப்பூர்:கம்பளி ஆடை தயாரிப்பு குறித்த விளக்கம் அளிக்கும் கருத்தரங்கம், வரும் 15ம் தேதி, ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நடக்கிறது.திருப்பூர், முதலிபாளையம், நிப்ட்--டீ கல்லுாரி, புதுவகை ஆடைகளை தயாரித்து, பின்னலாடை துறையினர் மத்தியில் அறிமுகப்படுத்தி வருகிறது. கம்பளி இழை பின்னலாடை உற்பத்தியை திருப்பூர் தொழில் துறையினர் மத்தியில் ஊக்கப்படுவதற்காக, நிப்ட்--டீ கல்லுாரி, ஆஸ்திரேலிய நாட்டு உல் மார்க் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.கம்பளி இழையில் விளையாட்டு, குளிர் கால பின்னலாடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. கம்பளி பின்னலாடை தயாரிப்பு; கம்பளியுடன், பாலியெஸ்டர், நைலான் போன்ற இழைகள் கலந்து ஆடை தயாரிப்பது; சந்தைப்படுத்துதல் குறித்த கருத்தரங்கம், வரும் 15ம் தேதி, அப்பாச்சி நகரில் உள்ள, ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நடக்கிறது.தொழில் துறையினர் பயன்பெறும் வகையில், இலவசமாக கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்புக்கு ஆலோசனைகள் வழங்கும் இந்த கருத்தரங்கில், பின்னலாடை துறையினர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X