அரசு பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்பு; கலெக்டரிடம் வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்பு; கலெக்டரிடம் வேண்டுகோள்

Updated : பிப் 12, 2019 | Added : பிப் 11, 2019
Advertisement
 அரசு பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்பு; கலெக்டரிடம் வேண்டுகோள்

திருப்பூர்:தாயம்பாளையம் அரசு பள்ளியில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளை துவக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்தார். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, பொதுமக்கள் மனு கொடுத்தனர்.திருப்பூர், மாநகராட்சியின், 38வது வார்டு பொன்முத்து நகர் மக்கள் கொடுத்த மனுவில், 'பூங்கா பயன்பாட்டுக்கு ஒதுக்கிய 'ரிசர்வ்' சைட் இடம் உள்ளது. அங்கு, பொதுமக்கள், சிறுவர்களுக்கான பூங்கா அமைக்க வேண்டுமென, வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், திடக்கழிவு மறுசுத்திகரிப்பு நிலையம் அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுத்திகரிப்பு மைய பணியை கைவிட்டு, பூங்கா அமைக்க உத்தரவிட வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.l பொங்கலுார் ஒன்றியம், வடமலைபாளையம் ஊராட்சி மக்கள் கொடுத்த மனுவில்,'கருடமுத்துாரில், பொது இடத்தை ஆக்கிரமித்து, தனியார் ஒருவர் கழிப்பிடம் அமைத்துள்ளார். குளத்தில் மண் திருடப்படுகிறது. மயானமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குளம், மயானத்தை மீட்டெடுக்க வேண்டும். அரசு பள்ளியின் மீது, உயரழுத்த மின்பாதை செல்வதை தடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.l கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ஈஸ்வரன் கொடுத்த மனுவில், 'மங்கலம் ஊராட்சி பெரியபுத்துார் நொய்யல் கரையோரம், விவசாயிகள் பயன்படுத்தி வந்த வழித்தடத்தை, தனி ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். ஆக்கிரமிப்பை அகற்றி, நொய்யல் கரையோரம் சுத்தம் செய்து, மண்பாதை அமைத்துக்கொடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.l பல்லடம், ஆறுமுத்தாம்பாளையம், செந்தில்நகர் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், 'எங்கள் பகுதியில், 150 வீடுகள் உள்ளன; அங்கு, ஆழ்குழாய் தண்ணீர் மட்டும் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். விலை கொடுத்து தண்ணீரை வாங்க முடியாத நிலை உள்ளதால், விரைவில் குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.l இடுவாய், தாந்தோன்றியம்மன் நகர் மக்கள் கொடுத்த மனுவில், 'கடந்த, 10 ஆண்டுகளாக தாந்தோன்றியம்மன் நகரில் வசிக்கும் மக்களுக்கு, குடிநீர், தெருவிளக்கு, ரோடு, சாக்கடை என, எவ்வித வசதியும் செய்யப்படவில்லை. வீட்டு வரி செலுத்தி வருகிறோம். அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.l கருமாரம்பாளையம் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், '40 ஆண்டுகளாக வசிக்கும் இடத்தைவிட்டு, குடிசை மாற்று வாரிய வீட்டுக்கு செல்ல அறிவுறுத்துகின்றனர். ஆனால், 1.50 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டுமென்றால், ஏழைகளால் செலுத்த முடியாது; எனவே, மாற்று இடமோ, வீடோ, இலவசமாக வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.l தாயம்பாளையம் மக்கள் சார்பில், கொடுத்த மனுவில், 'தாயம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஏழை, எளிய மாணவர்கள் பயில்கின்றனர். அங்கு, எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளை துவக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்டியன்கோவில், ஒன்றியக்குழுவின், நான்காவது வார்டை, ஆண்கள் பொது வார்டாக அறிவிக்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளார்.l பல்லடம் அருகேயுள்ள ஸ்ரீ கொங்குராஜா நர்சரி பள்ளி நிர்வாகிகள் கொடுத்த மனுவில், 'காமநாயக்கன்பாளையத்தில், 20 ஆண்டுகளாக, பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் இருந்து 180 மீட்டர் துாரத்தில் உள்ள நிலத்தில், கோழிப்பண்ணை அமைக்க முயற்சி நடக்கிறது. குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் என்பதால், அனுமதி வழங்கக்கூடாது' என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X