பாதிக்கப்பட்ட பெண் கலெக்டரிடம் முறையிட்டார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாதிக்கப்பட்ட பெண் கலெக்டரிடம் முறையிட்டார்

Added : பிப் 11, 2019
Advertisement

திருப்பூர்:'டாஸ்மாக்' பார் நடத்தும் நபர், நிலத்தில் அத்துமீறி நுழைந்து, தாக்குதல் நடத்தியதாக, பாதிக்கப்பட்ட பெண், குடும்பத்துடன் வந்து, கலெக்டரிடம் முறையிட்டார்.திருப்பூர், பலவஞ்சிபாளையம், ஐஸ்வர்யா நகரை சேர்ந்த, முருகேந்திரன் மனைவி துர்க்காதேவி என்பவர், 'டாஸ்மாக்' மதுக்கடை பார் நடத்தும் நபர், தன்னை அடித்து துன்புறுத்துவதாக, கண்ணீர் மல்க, கலெக்டரிடம் நேற்று முறையிட்டார்.இதுகுறித்து துர்காதேவி கூறியதாவது:கரைப்புதுார் கிராமத்தில், எனக்கு சொந்தமான இடத்துக்கு அருகிலுள்ள, இடத்தில் 'டாஸ்மாக்' நடத்தும் ஜீவானந்தம் என்பவர், எனது நிலத்தில் இருந்த கம்பிவேலியை அகற்றி, கட்டுமான பணிகளை துவக்கினார். நிலத்தில் வேலை செய்யாமல் வெளியேறுமாறு கூறியபோது, அடியாட்களை வைத்து அடித்தார்.இது தொடர்பான வழக்கு, கோர்ட்டில் இருக்கிறது. இம்மாத இறுதியில், விசாரணை நடக்க உள்ள நிலையில், மீண்டும் அத்துமீறி நுழைந்து கட்டுமான பணியை துவக்குகின்றனர். அத்துமீறி நுழைந்து, என்னையும், எனது கணவரையும் தாக்கியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X