சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டாஸ்மாக்' மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார், 'ரெய்டு'

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 'டாஸ்மாக்' மண்டல அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்பு போலீசார், 'ரெய்டு'

சென்னை:சென்னை, அண்ணாசாலையில் உள்ள, 'டாஸ்மாக்' மண்டல அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று அதிரடி சோதனை நடத்தி, 3 லட்சம் ரூபாயை கைப்பற்றினர். முதுநிலை மண்டல மேலாளர், முத்துகுமாரசாமியிடம், பல மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட, டாஸ்மாக் கடைகள் உள்ளன. விற்பனையில், சென்னை முதலிடம் வகிக்கிறது. இந்த கடைகளின் விற்பனையை கவனிப்பது, பணியாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை, டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம் கவனித்து வருகிறது.இந்த மண்டல மேலாளர் அலுவலகம், சென்னை, அண்ணா சாலை, 'எல்.எல்.ஏ., பில்டிங்' என்ற, கட்டடத்தின் மாடியில் செயல்பட்டு வருகிறது. முதுநிலை மண்டல மேலாளராக, முத்துகுமாரசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். அவருக்கு கீழ், மாவட்ட மேலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில், நேற்று குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, பணியிட மாறுதல் கோரி, பலர் மனுக்கள் அளித்தனர். அதேபோல, பணி இடை நீக்கம் செய்யப்பட்டோர், தங்களை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளும்படி, கோரிக்கை மனு அளித்தனர்.இவர்களிடம், முத்துகுமாரசாமி உள்ளிட்ட அதிகாரிகள், பல லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக, மாநில லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று மதியம், 2:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில், அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது, பலரிடம் லஞ்சமாக பெறப்பட்ட, கணக்கில் வராத, 3 லட்சம் ரூபாயை கைப்பற்றினர். முத்துகுமாரசாமியிடம், பல மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணையும் நடத்தினர். விரைவில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முத்துக்குமாரசாமி கைது செய்யப்படலாம் என, லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.இதே அலுவலகத்தில், பணியிட மாறுதல் வழங்க, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, 2018 மார்ச்சில், முதுநிலை மண்டல மேலாளராக இருந்த, குணசேகரன் கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
12-பிப்-201913:28:01 IST Report Abuse
Bhaskaran ஆள்மாறினாலும் லஞ்சம் வாங்குவது மாறவில்லை அந்த சீட்டின் மகிமை அப்படியோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X