59 நிமிட கடன் திட்டம்: ரூ.5 கோடி வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

59 நிமிட கடன் திட்டம்: ரூ.5 கோடி வழங்கல்

Added : பிப் 11, 2019
Advertisement

திருப்பூர்:இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில், சிறப்பு முகாமில், ரூ.5.04 கோடி கடன் வழங்கப்பட்டது.பிரதமர் மோடி, கடந்த 2018, நவம்பர் 2ம் தேதி, சிறு, குறு நிறுவனங்களுக்கான வளர்ச்சி திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தில், தொழில் முனைவோருக்கு, 59 நிமிடத்தில் கடன் அனுமதி வழங்கப்படுகிறது; குறைகள் கேட்கப்பட்டு, தீர்வு காணப்படுகிறது. வளர்ச்சி திட்டம் அறிவிக்கப்பட்டு, நுாறு நாட்களை கடந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம், முன்னோடி வங்கியான கனரா, இந்தியன் வங்கி இணைந்து, இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. நுாறு நாள் திட்டத்தின், 32வது சிறப்பு முகாம், கலெக்டர் அலுவலக அரங்கில் நடந்தது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கோவை மண்டல மேலாளர் சரஸ்வதி தலைமை வகித்தார். இம்முகாமில், தொழில் நிறுவனங்கள், தனிநபர்கள் உட்பட 54 நபர்களுக்கு, ரூ.5.04 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டது.ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் சிறு, குறு தொழில் துறை பொதுமேலாளர் பார்த்தசாரதி, கோவை பொது மேலாளர் பாட்ரோ, முன்னோடி வங்கி மேலாளர் சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X