மகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத தாய் : சங்கிலியால் கட்டி போட்டதால் பரபரப்பு

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (6)
Advertisement
 மகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத தாய் :  சங்கிலியால் கட்டி போட்டதால் பரபரப்பு

பெங்களூரு: வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லாததால், சிகிச்சை அளிக்க முடியாத தாய், தன் மகளை சங்கிலியால் கட்டிப்போட்டது குறித்த வீடியோ, வேகமாக பரவி வருகிறது.சிறுமியை, வீட்டின் வெளியே சங்கிலியால் கட்டி போட்டிருந்தது குறித்த வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவை, புதுடில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் பதிவு செய்து, போலீசாருக்கு தகவலளித்தார்.இதன் பின், அந்த வீடியோ குறித்து, சைபர் கிரைம் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, பெங்களூரு எச்.ஏ.எல்., சாலையில் வீடியோ பதிவு செய்யப்பட்டது, கண்டுபிடிக்கப்பட்டது.தகவலறிந்த, எச்.ஏ.எல்., காவல் நிலைய போலீசார், சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்தனர். போலீசார் சென்றபோதும், சிறுமி, சங்கிலியால் கட்டப்பட்டிருந்தார்.இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது, சிறுமிக்கு, 7 வயது என்றும், வயதுக்கு தகுந்த வளர்ச்சி இல்லாததாலும், சரியாக பேச்சு வராததாலும், அடிக்கடி வீட்டை விட்டு ஓடியதாலும், சிறுமியின் தாயே, சங்கிலியில் கட்டி போட்டது தெரியவந்தது.எச்.ஏ.எல்., காவல் நிலைய போலீசார் கூறியதாவது:சிறுமியின் தாய், வயிற்றுப்பிழைப்புக்காக வீட்டு வேலைக்கு செல்கிறார். வீட்டில் தனியாக இருக்கும் சிறுமி, வெளியே ஓடி சென்றுள்ளார். நாளொன்றுக்கு, ஐந்தாறு முறை வீட்டிலிருந்து வெளியேறும் சிறுமியை, அவரது தாய் பல இடங்களிலும் தேடி அழைத்து வந்துள்ளார்.தந்தையும் கூலி வேலைக்கு செல்கிறார். இருவரும் பணிக்கு சென்றால் தான், வாழ்க்கை நடத்த முடியும். இதனால் மகளை கட்டிப்போட்ட தாய் மீது, வழக்கு பதிவு செய்யவில்லை. மாறாக, சிறுமியை, குழந்தைகள் நல காப்பகத்திடம் ஒப்படைத்துள்ளோம்.சிறுமிக்கு வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதால், சிகிச்சை மேற்கொள்ளவும், பெற்றோரிடம் பணம் இல்லை. பெற்றோருக்கும், 'கவுன்சிலிங்' வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
14-பிப்-201918:58:47 IST Report Abuse
Murugan பெண் குழந்தைகளை வேட்டையாடும் மிருகங்கள் வெளியில் நடமாடுவதால் அந்த தாய் பயத்தில் செய்துள்ளார்……...நல்ல உள்ளம் படைத்தோரால் நல்லதே விரைவில் நடக்கும்………….
Rate this:
Share this comment
Cancel
G.Krishnan - chennai,இந்தியா
14-பிப்-201915:00:45 IST Report Abuse
G.Krishnan அந்த தாயின் செயல்பாடு சரியானதே....அந்த தாய் கூலி வேலைக்கு சென்று விடுவதால் குழந்தை வெளியே போகாமலிருக்க கட்டிப்போட்டிருக்கிறார் . . . . இதை பெரிய செய்தியாகியதே தவறு . . . . .அந்த செய்தியினால் அந்த குழந்தைக்கு தேவையான உதவி அரசாங்கத்தின் மூலம் கிடைக்குமேயானால் நல்லதே? . . . . போலீசாருக்கு தகவல் கொடுக்காமல் குழந்தைகளின் உதவி மையத்துக்கு தகவல் சொல்லிருக்கலாம். . . . . . . . .
Rate this:
Share this comment
Cancel
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
14-பிப்-201904:20:00 IST Report Abuse
Thalaivar Rasigan உடல் சுகத்திற்காக அங்கங்கே குழந்தைகளை கொன்று விடுகின்றனர். தானும் வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ள ஏழை தாய், குழந்தை எங்கேயும் தெரியாமல் போய் விட கூடாது என்ற எண்ணத்தில் செய்து இருக்கிறார். சமூகம் வாழ்ந்தாலும் ஏசும் - தாழ்ந்தாலும் ஏசும். ஆனால் உதவி மட்டும் செய்யாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X