லோக் ஆயுக்தா அமைக்க தமிழகத்துக்கு அவகாசம் | Dinamalar

லோக் ஆயுக்தா அமைக்க தமிழகத்துக்கு அவகாசம்

Added : பிப் 11, 2019 | கருத்துகள் (2)
Advertisement

புதுடில்லி: தமிழகத்தில், 'லோக் ஆயுக்தா'வுக்கு தலைவர், உறுப்பினர்களை, மூன்று மாததத்துக்குள் நியமிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும், அரசு துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்க, 2013ல், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட்டது. இது, 2014, ஜன., 16ல் அமலுக்கு வந்தது.உச்ச நீதின்றத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த வழக்கறிஞர், அஷ்வினி உபாத்யாய், தாக்கல் செய்த பொது நல மனுவில், 'மாநிலங்களில் லோக் ஆயுக்தா உடனே அமைக்கப்பட வேண்டும். லோக் ஆயுக்தாவுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், நிதி ஒதுக்கீடு செய்யாமல், மாநில அரசுகள் காலம் தாழ்த்தி வருகின்றன' என, கூறியிருந்தார்.இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் நடந்து வருகிறது.இந்த வழக்கு விசாரணை, நேற்று நடந்த போது, தமிழகம், நாகாலாந்து, மேற்கு வங்கம், ஒடிசா, மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் சார்பில், லோக் ஆயுக்தா அமைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.நாகாலாந்து தாக்கல் செய்த அறிக்கையில், 'மாநிலத்தில், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி, உமா நாத் சிங் தலைமையில், லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.தமிழகத்தில், லோக் ஆயுக்தாவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மூன்று மாதத்தில் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.ஒடிசா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 'மாநிலத்தில், லோக் ஆயுக்தா, ஏப்., ௮ம் தேதி பொறுப்பேற்கிறது' என, தெரிவிக்கப்பட்டது.மேற்கு வங்கம் தாக்கல் செய்த அறிக்கையில், 'லோக் ஆயுக்தா தலைவராக, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி, அசிம் குமார் ராய் நியமிக்கப்பட்டுள்ளார்' என, தெரிவிக்கப்பட்டது.



வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
12-பிப்-201909:13:55 IST Report Abuse
Chanemougam Ramachandirane பேசாமல் நீதிமன்றம் தனி அலுவலரை நீதிபதியை அமர்த்தி உறுதி படுத்தனும் மாநிலங்கள் மத்திய ராசு சட்டங்களை இயற்றி உள்ளதா என்று இல்லயென்றால் அரசை அதிகாரியை பனி நீக்கம் செய்ய முன் வரணும்
Rate this:
Share this comment
Cancel
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
12-பிப்-201909:06:24 IST Report Abuse
Chanemougam Ramachandirane புதுச்சேரி இன்னும் சட்டசபையில் நிறைவேற்றவில்லை. இதுவரை புதுவை அரசு மத்திய அரசு இயற்றும் சட்டம் புதுவைக்கு பொருந்தும் யாரையும் கேட்க வேண்டியதில்லை என்று தெரிந்தும் அதிகாரிகள் சரியாக செயல் படவில்லை என்று தெரிகிறது கவர்னர் மற்றும் முதல்வர் முன் வர வேண்டும் நிறைவேற்ற அல்லது லோக் அயுக்தவை நீதிமன்றம் சுய மோட்டோ படி கேள்வி கேட்கணும் ஊடகங்கள் முன் வரணும் இயக்கங்கள் அரசை வலியுறுத்தணும் மக்களுக்கு சேவை கிடைக்க லோக் அயுக்த கொண்டு வர நிர்பந்திக்கணும் அதே போல் பாராளுமன்ற தேர்தலுடன் பஞ்சாயத்து தேர்தலும் வைக்கணும் என்று வலியுறுத்தணும் அப்போது தான் புதுவைக்கு பஞ்சாயத்திற்கு ஒதுக்கும் பணம் கிடைக்கும் என்பதினை உணர்ந்து அரசு செயல் படணும் சேவைகள் கிடைப்பதை தடையாக இருக்க கூடாது பஞ்சாயத்து இல்லாமல் வரி ஏற்றி விதித்ததே தவறு என்பதினை ஒனற வேண்டும் புதுவையில் சொத்து மதிப்பு குறைத்து செய்து வரியை ஏற்றுவது என்பது அரசு நிர்வாகம் தவறாக செயல் படுகிறது என்று தெளிவாகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X