ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில் ரூ.4.67 லட்சத்துக்கு தீர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆர்பிட்ரேஷன் கவுன்சிலில் ரூ.4.67 லட்சத்துக்கு தீர்வு

Added : பிப் 11, 2019
Advertisement

திருப்பூர்:பின்னலாடை அமைப்புகளை அங்கத்தினராக கொண்டு இயங்குகிறது, திருப்பூர் ஆர்பிட்ரேஷன் கவுன்சில். இந்த கவுன்சிலில், வர்த்தகம் சார்ந்த ஏராளமான வழக்குகள் பதிவாகின்றன. மனு தாரர் மற்றும் எதிர் தரப்பினரை அழைத்து பேசி, பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு ஏற்படுத்துகிறது, கவுன்சில்.திருப்பூரை சேர்ந்த ஒரு நிட்டிங் நிறுவனம், உள்ளூர் வர்த்தக முகமை நிறுவனம் (பையிங் அலுவலகம்) அளித்த ஆர்டரின்பேரில், துணி உற்பத்தி செய்து வழங்கியது. துணியை பெற்றுக்கொண்ட வர்த்தக முகமை நிறுவனம், அதற்கான தொகை, 4.67 லட்சத்தை வழங்காமல், இழுத்தடித்து வந்தது.நிட்டிங் நிறுவனம் அளித்த புகாரின்பெயரில், நேற்று நடந்த பேச்சில் சுமூக தீர்வு காணப்பட்டது. அதன்படி, ரூ.4.67 லட்சம், நிட்டிங் நிறுவனத்துக்கு பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X