அவிநாசியில் 'மூன்றாவது கண்!' கலெக்டரின் 'சிக்னலு'க்கு காத்திருப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அவிநாசியில் 'மூன்றாவது கண்!' கலெக்டரின் 'சிக்னலு'க்கு காத்திருப்பு

Added : பிப் 11, 2019
Advertisement
 அவிநாசியில் 'மூன்றாவது கண்!' கலெக்டரின் 'சிக்னலு'க்கு காத்திருப்பு

அவிநாசி:அவிநாசி வழியே செல்லும் முக்கிய ரோடுகளில், 'சிசிடிவி' உடன். 'சிக்னல்' பொருத்தும் திட்டம், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்காக காத்திருப்பில் உள்ளது.ஊட்டி, மேட்டுப்பாளையம், கோவை, ஈரோடு, பவானி, சேலம், மதுரை, திருப்பூர், சத்தி, நம்பியூர் என, பல்வேறு வழித்தடங்களில் செல்லும் பஸ் உட்பட வாகனங்கள், அவிநாசியை கடந்தே செல்கின்றன.அவிநாசியிலும், மக்கள் தொகை மற்றும் வாகன எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
குறிப்பாக, அவிநாசி புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.வாகன நெரிசல் பிரச்னை ஒரு புறமிருக்க, நெரிசலை சாதகமாக்கும் சில 'பலே' ஆசாமிகள், 'பிக் பாக்கெட்', வழிப்பறி உட்பட செயல்களில் ஈடுபடுகின்றனர். அதிகரித்து வரும் இத்தகைய குற்றச்செயலை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும் திணறி வருகின்றனர்.இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, கண்காணிப்பு கேமராவுடன் கூடிய சிக்னல் பொருத்துவது மட்டுமே சிறந்த வழி என, போக்குவரத்து போலீசாரும், நெடுஞ்சாலைத் துறையினரும் கருதினர். 'அவற்றை வழங்க, தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்' என, அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது.இருப்பினும், உள்ளூரில் உள்ள எந்தவொரு நிறுவனமோ, அமைப்போ, இந்த ஆக்கப்பூர்வ பணிக்கு போலீசாருடன் கை கோர்க்க முன்வராத நிலையில், ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனம், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முதல், போலீஸ் ஸ்டேஷன் வரையுள்ள ரோட்டை கண்காணிக்கும் வகையில், சிசிடிவி.,யுடன் கூடிய, சிக்னல் அமைக்க முன்வந்துள்ளது.
இதற்கு, மாநில நெடுஞ்சாலைத் துறையின் தடையில்ல சான்று அவசியம் என்ற நிலையில், அதற்கான முயற்சியை போலீசார் மேற்கொண்டனர்.சிசிடிவி., கேமராவுடன் கூடிய சிக்னல் பொருத்த நெடுஞ்சாலைத் துறையினர் பரிந்துரைத்துள்ள நிலையில், கலெக்டரின் அனுமதி கோரப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. கலெக்டரின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில், பணி துவங்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X