பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இது தான் மிக சிறந்த பட்ஜெட்
துணை முதல்வர் பெருமிதம்

சென்னை: ''இதுவரை, நான் தாக்கல் செய்த பட்ஜெட்டிலேயே, மிகச் சிறந்த பட்ஜெட், இதுவாக தான் இருக்கும்,'' என, துணை முதல்வர், பன்னீர்செல்வம் கூறினார்.

Budget,பட்ஜெட்,துணை முதல்வர்,பன்னீர்செல்வம்,பெருமிதம்


சட்டசபையில், நேற்று நடந்த பட்ஜெட் மீதான விவாதம்:


தி.மு.க., - செங்குட்டுவன்: மாநிலத்தின் கடன், 6 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நிதி பற்றாக்குறையும் கூடியுள்ளது. தமிழகத்தை கடன்கார மாநிலமாக்கிய பெருமை, உங்களையே சேரும்.

மின் துறை அமைச்சர், தங்கமணி: இந்த ஆட்சியில் தான் கடன் இருப்பது போல பேச வேண்டாம். தி.மு.க., ஆட்சியில், மின் வாரியத்திற்கு, 9,000 கோடி ரூபாய் கடன் இருந்தது. அது மட்டுமின்றி, 15 மணி நேரம் மின்வெட்டும் இருந்தது.கடன் வாங்குவது, காலங்காலமாக இருக்கும் நடைமுறை. தி.மு.க., ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடியது போன்று பேசக் கூடாது. கடன் வாங்குவதற்கு முக்கிய காரணமே, உங்கள் ஆட்சி தான்.

துணை முதல்வர், பன்னீர்செல்வம்: பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல, இங்கு பேசக் கூடாது.ஒரு மாநிலத்தின் வருவாய் வளர்ச்சி என்பது, அந்த மாநிலத்தின் சொந்த வருவாய், மத்திய அரசு வழங்கும் நிதி, மானியம் உள்ளிட்டவை உள்ளடக்கியது. மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை, கடன் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதுவரை, நான் தாக்கல் செய்த பட்ஜெட்டிலேயே, சிறந்த பட்ஜெட், இதுவாகத் தான் இருக்கும். சட்டியில் இருப்பது, அகப்பையில் வருவதுபோல, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த துறைகளுக்கு, என்னென்ன திட்டங்கள் தேவையோ, அதை செயல்படுத்தும் அளவிற்கு, ஆரோக்கியமாக, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் தான், பலதரப்பட்டவர்களும், பத்திரிகைகளும், பட்ஜெட்டை மனதார பாராட்டுகின்றனர். இவ்வாறு, விவாதம் நடந்தது.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
13-பிப்-201917:19:41 IST Report Abuse

RMjaya madam was there ,how dud you walk ,did salute,fell down on her feet, now you told that your budget today is better than Jaya madams period.During her sickness you were the acting CM ,but you donot know how she died. you people can make any thing best budget.God knows.! Very pain full that iron lady died as an orphan.

Rate this:
K.n. Dhasarathan - chennai,இந்தியா
12-பிப்-201916:02:57 IST Report Abuse

K.n. Dhasarathanஐயா இதுதான் நீங்கள் தயாரிக்கும் கடைசி படஜெட், என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

Rate this:
PANDA PANDI - Aththipatti,இந்தியா
12-பிப்-201914:13:12 IST Report Abuse

PANDA PANDIஅய்யா எங்கள வெச்சு காமடி கீமடி ஒன்னும் பண்ணலியே.. எங்க அம்மா இருந்தப்போ கூட நீங்க இப்படி சொன்னதில்லை. இப்போ அவங்க இறந்ததிற்கு அப்புறம் இப்படி சொல்ல எப்படி மனசு வந்திச்சுன்னு எனக்கொரு டவுட். அம்மாவின் அரசு வாழ்க வாழ்க.

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X