கொலை, தற்கொலை, பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை, தற்கொலை, பலி

Added : பிப் 11, 2019
Advertisement

மரத்தின் மீது பைக் மோதி இருவர் பலி
கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த, இரட்டைதாரையைச் சேர்ந்த நண்பர்களான, 14 - 18 வயதுள்ள மூவர், நேற்று காலை, 8:00 மணிக்கு, ஒரே பல்சர் பைக்கில் சென்றனர். சந்தவாசல் - படவேடு அருகே சென்றபோது, பைக் நிலை தடுமாறி சாலையோர புளியமரத்தின் மீது மோதியது. இதில், இருவர் இறந்தனர். 17 வயது சிறுவன் படுகாயமடைந்து, வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சந்தவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் பலிஆலந்துார்: சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர், வஜ்ஜிரவேலு, 61. இவரது மகன் சுரேஷ், 40. இருவரும், உடல்நலம் பாதிக்கப்பட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.நேற்று முன்தினம், வஜ்ஜிரவேலு பலியானார். இதனால், காரில் சுரேசை அழைத்து வந்த உறவினர்கள், தந்தை இறந்த தகவலை தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த சுரேஷ், வாகனத்திலேயே பலியானார்.
தீக்காயமடைந்த பெண் பலி
சூளைமேடு: சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்தவர், மாலதி, 32. இவர், 4ம் தேதி, மண்ணெண்ணெய் அடுப்பில் சமைத்த போது, புடவையில் தீ பற்றி காயமடைந்தார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று அதிகாலை உயிரிழந்தார். சூளைமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
'பைக்' விபத்தில் இருவர் பலி
தரமணி: சென்னை, தரமணியைச் சேர்ந்தவர், பன்னீர்செல்வம் மகன் மணிவர்மன், 17. நேற்று காலை, இருசக்கர வாகனத்தில், களிக்குன்றம் பிரதான சாலையில், அதிவேகமாக சென்றார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம், ஐ.ஐ.டி., தடுப்புச்சுவரில் மோதியது. தலையில் பலத்த காயமடைந்த மணிவர்மன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியானார்.அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆதம்பாக்கம்: சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர், யுவராஜ், 24. இவர், முனியவேல், 34, வெற்றி, 29, ஆகியோருடன், நேற்று காலை, இருசக்கர வாகனத்தில், இரும்புலியூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னால் சென்ற கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில், மூவரும் துாக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்த யுவராஜ், சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த வெற்றி, முனியவேல், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.கார் ஓட்டுனர் தற்கொலைஅடையார்: சென்னை, அடையாரைச் சேர்ந்தவர், வீரமணி, 34; கார் ஓட்டுனர். இவரது மனைவி பவானி, 30. இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். வீரமணி, இருசக்கர வாகனத்தை விற்றதால், நேற்று முன்தினம், பவானி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் மனமுடைந்த வீரமணி, நேற்று முன்தினம் இரவு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அடையாறு போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் மோதியதில் இருவர் பலி
வில்லிவாக்கம்: சென்னை, வில்லிவாக்கத்சைத் சேர்ந்தவர், நரேந்திர குமார், 45; உணவு வினியோகிக்கும் வேலை செய்து வந்தார். இவர், 5ம் தேதி, கீழ்ப்பாக்கம், டாக்டர் முனியப்பா சாலையோரம், இருசக்கர வாகனத்துடன் நின்றிருந்தார். அப்போது வந்த கார் மோதியதில், நரேந்திர குமாரின் கால் முறிந்தது. தனியார் மருத்துவமனையில், 9ம் தேதி இரவு, காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நரேந்திர குமார், நேற்று முன்தினம் இரவு பலியானார்.கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
 பூந்தமல்லி: சென்னை, மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர், சக்கரபாணி, 50; வேன் ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு, அய்யப்பன்தாங்கல் அருகே, சாலையோரத்தில் வேனை நிறுத்தி நின்றிருந்தார். அப்போது வந்த கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே சக்கரபாணி பலியானார். காரில் வந்த ஹேமாமாலினி, 30, உட்பட, 6 பேரும் காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பூந்தமல்லி போக்குவரத்து போலீசார், சக்கரபாணி உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
மிருதங்க வித்வான் தற்கொலை
எம்.ஜி.ஆர். நகர்: சென்னை, எம்.ஜி.ஆர்., நகர், சோழா தெருவைச் சேர்ந்தவர், சின்னையா, 70. இவர், கச்சேரிக்கு, மிருதங்கம் மற்றும் தபேலா வாசித்து வந்தார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சின்னையா, நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அறையில், துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். எம்.ஜி.ஆர்., நகர் போலீசார், அவரது உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X