சென்னை மெட்ரோவில் இலவச பயணம் : 'குட்டீஸ்'களுடன் குடும்பமாக பயணித்து உற்சாகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை மெட்ரோவில் இலவச பயணம் : 'குட்டீஸ்'களுடன் குடும்பமாக பயணித்து உற்சாகம்

Updated : பிப் 12, 2019 | Added : பிப் 11, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 சென்னை மெட்ரோவில் இலவச பயணம் :   'குட்டீஸ்'களுடன் குடும்பமாக பயணித்து உற்சாகம்

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின், இலவச பயண அறிவிப்பை தொடர்ந்து,அனைத்து வழித்தடத்திலும், நேற்று நாள் முழுவதும், குழந்தைகளுடன், குடும்பமாகபயணித்து, மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின், முதல்கட்டமாக, பரங்கிமலை - சென்ட்ரல், விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை இடையே திட்டம்அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி, பணிகள் முடிந்த பகுதிகளில், ஒவ்வொரு கட்டமாக, போக்குவரத்து துவங்கப்பட்டது.இதன் படி, இறுதியாக நேற்று முன்தினம், டி.எம்.எஸ்., - வண்ணாரப்பேட்டை இடையே, மெட்ரோ ரயில் போக்குவரத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.இதனால், முதல்கட்ட திட்டம் முழுமை பெற்றுள்ளது. இதில், வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் விம்கோ நகர் வரை, முதல்கட்ட விரிவாக்க பணி மட்டும் நடந்து வருகிறது.மெட்ரோ முதல்கட்ட திட்டம், முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ள மகிழ்ச்சியில், அனைத்து வழித்தடத்திலும், நேற்று முன்தினம் மாலை முதல், நேற்று இரவு வரை, பயணியர் இலவசமாக பயணிக்கலாம் என, மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது.இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை முதல், கட்டணமின்றி பயணியர், மெட்ரோ ரயிலில் பயணித்து மகிழ்ந்தனர். அனைத்து ரயில்களிலும், நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது. மக்கள், தங்கள் குழந்தைகளுடன், குடும்பமாக, மெட்ரோ ரயிலில் பயணித்து, உற்சாகமடைந்தனர்.ஒவ்வொரு நிலையத்திலும் இறங்கி, நிலையங்களின் பிரமாண்ட கட்டுமானங்களை வியப்புடன் பார்த்தனர். ரயில் இயக்கம், நிலையத்தின் உள்ள தொழில்நுட்ப வசதிகள் குறித்து, சிறுவர்கள், ஊழியர்களிடம் ஆர்வத்துடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.சென்னை மட்டுமின்றி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டியில் இருந்தும், குடும்பத்துடன் வந்திருந்து, மெட்ரோ ரயிலில் மக்கள் பயணம் செய்தனர்.சுரங்க பயணத்தின் போது, தங்களை அறியாமல் சப்தமிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பயண பாதுகாப்பு, அறிவிப்புகள், ஊழியர்களின் கண்காணிப்பு மற்றும் உதவி ஆகியவை, பயணியரை வெகுவாக கவர்ந்துள்ளன.வெளியூர்களில் இருந்து வந்த கல்லுாரி மாணவ - மாணவியர், நிலையங்களிலும், ரயில் பயணத்தின் போதும், 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
13-பிப்-201910:37:47 IST Report Abuse
Jaya Ram பெயர் வெளியிட முடியாதவர்களுக்கு என்னத்துக்கு விமர்சனம்
Rate this:
Share this comment
Cancel
12-பிப்-201912:33:54 IST Report Abuse
ஆப்பு இதே மாதிரி இலவச பயண திட்டத்தை ஆண்டு முழுவதும் நடத்தி ஏழை எளிய மக்களின் சிரிப்பில் இறைவனைக் காண அண்ணன் பழனி அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
12-பிப்-201912:34:00 IST Report Abuse
ஆப்பு இதே மாதிரி இலவச பயண திட்டத்தை ஆண்டு முழுவதும் நடத்தி ஏழை எளிய மக்களின் சிரிப்பில் இறைவனைக் காண அண்ணன் பழனி அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X