12 'போக்சோ' வழக்குகளில் இடைக்கால நிவாரணம்: மாவட்டத்தில் மொத்தம் 39 வழக்குகள் பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

12 'போக்சோ' வழக்குகளில் இடைக்கால நிவாரணம்: மாவட்டத்தில் மொத்தம் 39 வழக்குகள் பதிவு

Added : பிப் 12, 2019
Advertisement

கோவை:கோவை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட, 12 'போக்சோ' வழக்குகளில், பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியருக்கு, இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்பது விதி.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, இதற்கான நிவாரணத்தை முடிவு செய்கிறது. அதிகபட்சம், 3 லட்சம் ரூபாய் வரை, இந்த தொகை வழங்கப்படும்.டி.ஜி.பி., மேற்பார்வையில் இருக்கும் இந்த நிவாரணத்தொகை, கலெக்டர் மற்றும் போலீஸ் கமிஷனர் இணைந்து பரிந்துரைத்தால், பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை, 39 வழக்குகள், 'போக்சோ' சட்டத்தில் பதிவாகியுள்ளன.இதில், 27 வழக்குகள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விசாரணையில், நிலுவையில் உள்ளன. 12 வழக்குகளில், பாதிக்கப்பட்டோருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, மகிளா கோர்ட் மூலமும், நிவாரணம் வழங்க உத்தரவிடப்படுகிறது.மாவட்ட குழந்தைகள் நலத்திட்ட அலுவலகம் மூலம், பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் சார்பில் நேரடியாக வழக்கு தொடர்ந்து, இடைக்கால நிவாரணம் பெறலாம்.கோவை மாவட்டத்தில், இந்த வகையில் நிவாரணம் கோரி, குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் சார்பில், இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X