மாநில பல்கலை கிரிக்கெட் பாரதியார் அணிக்கு வெள்ளி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

 மாநில பல்கலை கிரிக்கெட் பாரதியார் அணிக்கு வெள்ளி

Added : பிப் 12, 2019
Advertisement

கோவை:மாநில அளவில் அனைத்து அரசு பல்கலை மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில், பாரதியார் பல்கலை வெள்ளி பதக்கம் வென்றது.கோவையில், 27ம் ஆண்டு மாநில அளவில், அனைத்து பல்கலைகளுக்கான டி-20 கிரிக்கெட் போட்டி நடந்தது. 22 பல்கலை அணிகளை மேற்கு, வடக்கு, தெற்கு என 3 மண்டலங்களாக பிரித்து போட்டிகள் நடந்தன.மேற்கு மண்டல போட்டி, சேலம் பெரியார் பல்கலையில் நடந்தது. இதில், 3 பல்கலை அணிகள் பங்கேற்றன. பாரதியார் பல்கலை, 17 ரன் வித்தியாசத்தில் வேலுார் திருவள்ளுவர் பல்கலையையும்; 60 ரன் வித்தியாசத்தில் சேலம் பெரியார் பல்கலையையும் வென்று, முதலிடம் பிடித்தது.தெற்கு மண்டல போட்டியில் முதலிடம் பிடித்த, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையும்; வடக்கு மண்டலத்தில் முதலிடம் பிடித்த சென்னை பல்கலையும், இறுதி லீக் போட்டியில் மோதின.முதல் போட்டியில், பாரதியார் பல்கலை, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையை வென்றது. இறுதி போட்டியில், சென்னை பல்கலையிடம் மோதிய பாரதியார் பல்கலை,16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்று, 2ம் இடம் பிடித்தது.எஸ்.என்.ஆர்.,கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் வடிவேல், அணி மேலாளராக சென்றார். பாரதியார் பல்கலை உடற்கல்வி இயக்குனர்(பொ)ராஜேஷ்வரன் வெள்ளி வென்ற வீரர்களை பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X