புதுமைப்பள்ளி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: முதன்மை கல்வி அலுவலர் அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதுமைப்பள்ளி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: முதன்மை கல்வி அலுவலர் அழைப்பு

Added : பிப் 12, 2019
Advertisement

கோவை:புதுமைப்பள்ளி விருதுக்கு தகுதியிருந்தால், விண்ணப்பிக்கலாம் என, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர் சேர்க்கை, கட்டமைப்பு வசதி, துாய்மை பணிகள், கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளில், சிறந்து விளங்கும் பள்ளிக்கு, புதுமைப்பள்ளி விருது வழங்கப்படுகிறது.
தலா ஒரு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கு, ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை, சான்றிதழும், தலா ஒரு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு, இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு, சான்றிதழும் வழங்கப்படும்.இதற்கான அரசாணையில், மாவட்ட மாநில அளவில், தேர்வுக்குழு அமைத்தல், விதிமுறைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், விண்ணப்பிக்கும் நடைமுறை குறித்த தகவல் இல்லை. இதுகுறித்து, நமது நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து,நேற்று முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இதில், விருப்பமுள்ள பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், இவ்விருது குறித்த குழப்பங்களுக்கு, தீர்வு கிடைத்துள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறுகையில், ''மாவட்ட கல்வி அலுவலர்கள், கல்வியாளர், மூத்த ஆசிரியர் என, 10 பேர் கொண்ட குழு விரைவில் அமைக்கப்படும். பள்ளிகளில் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு, ஏற்ப ஆய்வு செய்து, தகுதி வாய்ந்த இறுதி பட்டியல், இயக்குனரகத்துக்கு அனுப்பப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X