பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அரசு ஊழியர்கள் மீதான வழக்கு
வாபஸ் பெறுவது குறித்து பரிசீலனை

சென்னை: ''அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகளை, வாபஸ் பெறுவது குறித்து, அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும்,'' என, மீன் வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள்,வழக்கு,வாபஸ்,பரிசீலனை


பல முறை பேச்சு:


சட்டசபையில், நேற்று கேள்வி நேரம் முடிந்த பின், தி.மு.க., - எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு, காங்., - எம்.எல்.ஏ., பிரின்ஸ் ஆகியோர் எழுந்து, 'அரசு ஊழியர்கள் மற்றும்

ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை, திரும்பப் பெற வேண்டும். அவர்கள் மீதான வழக்குகளை, வாபஸ் பெற வேண்டும்' என, வலியுறுத்தினர்.

அதற்கு பதில் அளித்து, அமைச்சர், ஜெயகுமார் கூறியதாவது: 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பினர், ஜன., 22 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். அவர்களுடன் பல முறை பேச்சு நடத்தப்பட்டது. அரசின் நிதி நிலையை எடுத்துக் கூறினோம். அதை ஏற்காமல், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மொத்தம், 7.41 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில், 2.10 லட்சம் பேர், அதாவது, 28 சதவீதத்தினர் மட்டும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.கைதுஅதில், சாலை மறியலில் ஈடுபட்ட, 6,521 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில், 1,656 பேர், சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின், போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisement

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது, பதிவு செய்யப்பட்ட வழக்குகளை, திரும்பப் பெறுவது குறித்து, அரசு ஆராய்ந்து முடிவு செய்யும்.

போக்குவரத்திற்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த வழக்குகளின் தன்மையைப் பொறுத்து, திரும்பப் பெறுவது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subbu - Singapore,சிங்கப்பூர்
12-பிப்-201918:38:44 IST Report Abuse

Subbuஅரசாங்க ஊழியராகள் ஒழுங்காக வேலை செய்வதில்லை. டிஸ்மிஸ் செய்யவேண்டும்

Rate this:
Subbu - Singapore,சிங்கப்பூர்
12-பிப்-201918:34:22 IST Report Abuse

Subbuகண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும் . தண்டனையை குறைக்க கூடாது . சம்பளத்தை குறைக்க வேண்டும்

Rate this:
விவசாயி - Tiruppur,இந்தியா
12-பிப்-201916:15:57 IST Report Abuse

விவசாயி என்ன புகழ் நீங்க அரசு ஊழியரா? ஏன் இந்த கரிசனம்....அப்போ அவர்கள் பொதுமக்களுக்கு இடையூறாக மறியல் செய்தது மட்டும் சரியா?

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X