தமிழ்நாடு

என்ன அநியாயம் இது! மகளிர் கோர்ட்டில் 87 'போக்சோ' வழக்கு தேக்கம்

Updated : பிப் 12, 2019 | Added : பிப் 12, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
கோவை:குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு, தண்டனை கடுமையாக்கப்பட்ட பிறகும், துரித விசாரணை நடத்தப்படாததால், கோவை மகளிர் கோர்ட்டில், 87 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதிப்பது, நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிய, உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய காலதாமதம் செய்வது, குற்றச்சாட்டு பதிவான பிறகு, அரசு தரப்பு சாட்சிகளை
 என்ன அநியாயம் இது! மகளிர் கோர்ட்டில் 87 'போக்சோ' வழக்கு தேக்கம்

கோவை:குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு, தண்டனை கடுமையாக்கப்பட்ட பிறகும், துரித விசாரணை நடத்தப்படாததால், கோவை மகளிர் கோர்ட்டில், 87 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதிப்பது, நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிய, உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய காலதாமதம் செய்வது, குற்றச்சாட்டு பதிவான பிறகு, அரசு தரப்பு சாட்சிகளை ஆஜர்படுத்தாதது உள்ளிட்ட போலீசாரின் அஜாக்கிரதை போக்கே, இதற்கு காரணமாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
வரதட்சணை கொடுமை, பெண் கொலை, பாலியல் பலாத்காரம், கடத்தல், பாலியல் சித்ரவதை, பெண் வன்கொடுமை உள்ளிட்ட, பெண்கள் பாதிப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, கோவையில் மகளிர் கோர்ட் மற்றும் கூடுதல் மகளிர் கோர்ட் செயல்பட்டு வருகிறது. 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாதிக்கப்பட்ட வழக்குகள், மாஜிஸ்திரேட் கோர்ட்களில் விசாரிக்கப்பட்டன. ஆனால், பெண் சிறார்கள் மீதான பாலியல் குற்ற செயல்கள் அதிகரித்ததால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ)கொண்டு வரப்பட்டது.மகளிர் கோர்ட்டுக்கு மாற்றம்இந்த வழக்குகள், மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை அல்லது அதிகபட்சமாக துாக்கு தண்டனை விதிக்கும் வகையில், சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.போக்சோ சட்டப்பிரிவின் கீழ், தாக்கல் செய்யப்படும் வழக்குகளை, ஓராண்டுக்குள் விரைந்து விசாரித்து, தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று, இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.போலீசாரால் தாமதம்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தாமதிப்பது, நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிய, உரிய ஆவணங்களை போலீசார் தாக்கல் செய்ய காலதாமதம் செய்வது, குற்றச்சாட்டு பதிவான பிறகு, அரசு தரப்பு சாட்சிகளை ஆஜர்படுத்தாதது, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வழக்கு தேக்கமடைகிறது.விசாரணை நீதிமன்றத்தில், நீதிபதி காலியிடம் இருந்தால், அவற்றை உடனடியாக நிரப்பாமல் ஆண்டுகணக்கில் இழுத்தடிப்பது போன்றவையும், விசாரணை தேக்கமடைய முக்கிய காரணம்.கோவையில் செயல்படும், மகளிர் கோர்ட்டில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நீதிபதி பணியிடம் காலியாக இருக்கிறது.
பொறுப்பு நீதிபதிகள் கூடுதலாக கவனிப்பதால், சாட்சி விசாரணை ரெகுலராக நடப்பது இல்லை. ஒரே நீதிபதி இரண்டு கோர்ட்டிலும், வழக்கை விசாரிக்க வேண்டியிருப்பதால், மகளிர் கோர்ட்டில் துரித விசாரணை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.இத்தனை நிலுவையா!2017, அக்., வரை, போக்சோ சட்டப்பிரிவின் கீழ், தாக்கல் செய்யப்பட்டிருந்த, 35 வழக்குகள் மட்டுமே நிலுவையில் இருந்தன. இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நீதிபதி பணியிடம் காலியாக இருப்பதால், கடந்த ஜன., 30 வரை, போக்சோ சட்டப்பிரிவின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவற்றில், 87 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மகளிர் கோர்ட்டில், மொத்தம் 127 வழக்குகள் தேக்கமடைந்துள்ளன.குற்றங்களை தடுக்க வேண்டிய போலீசாரே, சிறுமியர்க்கு எதிரான குற்ற வழக்குகளில் இப்படி அலட்சியமாக இருந்தால், வக்கிரப்புத்தி ஆசாமிகளுக்கு, குளிர் விட்டு போகாதா என்ன...?குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை அல்லது அதிகபட்சமாக துாக்கு தண்டனை விதிக்கும் வகையில், சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. போக்சோ சட்டப்பிரிவின் கீழ், தாக்கல் செய்யப்படும் வழக்குகளை, ஓராண்டுக்குள் விரைந்து விசாரித்து, தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று, இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கை வெச்சா துாக்குதான்!2012ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட, 'போக்சோ' சட்டத்தின் மூன்று மற்றும் நான்காவது பிரிவின் படி, குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினால், குறைந்தபட்சம் ஏழாண்டு சிறை அல்லது அதிகபட்சமாக ஆயுள்சிறை விதிக்கப்பட்டது. ஆனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்த காரணத்தால், தண்டனையை கடுமையாக்க வலியுறுத்தப்பட்டது.இதையடுத்து, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, அதிக பட்சமாக துாக்கு தண்டனை அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, 2018, ஏப்., முதல் போக்சோ சட்டம் திருத்தப்பட்டு, நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
'தண்டனையை கண்டுபயப்பட வேண்டும்'மகளிர் கோர்ட் முன்னாள் அரசு வக்கீல் தமிழ்செல்வி கூறியதாவது:சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதை தடுக்க, துரித விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வேண்டும். தண்டனையை பார்த்து, குற்றம் செய்ய நினைப்பவர்கள் பயப்பட வேண்டும்.சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, சம்பவம் நடந்த உடனேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் துரித விசாரணை நடத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றங்களில், நீதிபதி பணியிடத்தை நீண்ட காலம் காலியாக வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, தமிழ்செல்வி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-பிப்-201916:55:33 IST Report Abuse
ருத்ரா நம்ம வீட்டு குழந்தை safe ஆக இருக்கிறாள் என்று சுயநலமாக சிந்திக்காமல் பாதிக்கப்பட்ட அத்தனை சிறுமிகளும் நம் இந்தியக் குழந்தைகள் என்று விரைந்து விசாரணை நடத்த வேண்டும். தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
Rate this:
Cancel
12-பிப்-201917:08:28 IST Report Abuse
ஆப்பு பெண்களுக்கு பெண்களே எதிரி...குடும்பத்தில் மட்டுமல்ல...டி.வி சீரியலில் மட்டுமல்ல...மகளிர் கோர்ட்டில் கூட.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
12-பிப்-201913:25:11 IST Report Abuse
Bhaskaran முற்றிலும் உண்மை போக்ஸோ வழக்குகளில் தண்டனை மிகமிக கடுமையாக இருக்கணும் கூடாரம் செய்வதைப்பற்றி நினைக்க கூடாது அப்படியிருந்தா குற்றம் ஓரளவுகுறையும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X