வாலிபர் கிட்ட அடிச்சாங்க வாட்ச்சு... | Dinamalar

வாலிபர் கிட்ட அடிச்சாங்க வாட்ச்சு...

Added : பிப் 12, 2019
Share
சித்ராவுக்கு நல்ல சளி, காய்ச்சல். படுக்கையில் சாய்ந்து 'டிவி' பார்த்தபடி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். பழங்களுடன் பார்க்க வந்திருந்தாள் மித்ரா.''இந்த கிளைமேட்டுக்கு நிறைய பேர் இப்படித்தான் சளி, காய்ச்சலால அவதிப்பட்டுட்டு இருக்காங்க. நிலவேம்பு கஷாயம் நாலு வேளை குடிச்சா சரியாயிரும்'' என்று கூறியபடி, அருகில் அமர்ந்தாள் மித்ரா.''அதைத்தான் அப்பப்போ கலக்கி
 வாலிபர் கிட்ட அடிச்சாங்க வாட்ச்சு...

சித்ராவுக்கு நல்ல சளி, காய்ச்சல். படுக்கையில் சாய்ந்து 'டிவி' பார்த்தபடி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். பழங்களுடன் பார்க்க வந்திருந்தாள் மித்ரா.''இந்த கிளைமேட்டுக்கு நிறைய பேர் இப்படித்தான் சளி, காய்ச்சலால அவதிப்பட்டுட்டு இருக்காங்க. நிலவேம்பு கஷாயம் நாலு வேளை குடிச்சா சரியாயிரும்'' என்று கூறியபடி, அருகில் அமர்ந்தாள் மித்ரா.''அதைத்தான் அப்பப்போ கலக்கி குடுத்துக்கிட்டு இருக்கேன்...'' என்றபடி, சமையலறையில் இருந்து வந்தார் சித்ராவின் தாய்.''நம்மூர் வீட்டு வசதி வாரிய ஆபிஸ்ல ஒருத்தர் கலக்குற கலக்குல, எம்பிளாயீஸ்லாம் கதி கலங்கி கிடக்கறங்களாம்... கேள்விப்பட்டியா''- தொண்டையை செருமியபடி கேட்டாள் சித்ரா.''இல்லையே... யாரு அவரு?''''வேற யாருமில்ல... வாரிய முக்கிய அதிகாரியோட டிரைவர்தான் அது. இதுக்கு முன்னாலயும் இது மாதிரிதான், ஆபிஸ்ல இருக்கற ஸ்டாப்கள்ல சில பேரை மிரட்டி, நிறைய சம்பாதிச்சுட்டு இருந்தாராம். ஒரு கட்டத்துல கொதிச்சுப் போன எல்லாரும், விவரமா மேலிடத்துக்கு பெட்டிஷனை தட்டி விட்டிருக்காங்க''''ஓகோ...''''விசாரிச்ச வாரிய மேலிடம், அவரை சேலம் ஒகேனக்கல்லுக்கு துாக்கியடிச்சாங்க. யார், யாரையோ பிடிச்சு, மறுபடியும் இங்கயே வந்துட்டாராம். இப்ப பழையபடி மிரட்டல் வேலையை ஆரம்பிச்சுட்டாராம்'' என்று முடித்தாள் சித்ரா.''சமீபகாலமா வீட்டு வசதி வாரியம்னாலே, ஒரே ரணகளமா இருக்கு. ஒரு வாரம் முன்னாடிதான் லஞ்ச ஒழிப்பு ரெய்டு நடந்தது...'' என்றாள் மித்ரா.''இது மட்டுமா... வாரியத்துக்கு சொந்தமான ரேஸ்கோர்ஸ் வாடகை வீடுகள்ல அலாட்மென்ட் வாங்குன பல கவர்மென்ட் எம்பிளாயீஸ், வேற மாவட்டங்களுக்கு டிரான்ஸ்பர் ஆகி போயும், இன்னும் வீட்டை காலி பண்ணாம, வெளி ஆளுங்களுக்கு ரெண்டு மடங்கு வாடகைக்கு விட்டு சம்பாதிக்கறாங்களாம்''''இப்ப இருக்கற இ.இ., ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுன்னு கேள்விப்பட்டேனே.... எப்படி இவங்கள விட்டு வச்சிருக்காரு?'' என்று கேட்டாள் மித்ரா.''நம்மூருக்கு அடுத்ததா வரப்போற, கலெக்டரும்தான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆனவர்னு பேசிக்கறாங்க'' என்றாள் சித்ரா.''முதல்ல எல்லாரும் அப்படித்தான் 'பில்ட் அப்' குடுப்பாங்க... ஆமா, யாரு புதுசா வரப்போற கலெக்டரு?'' - ஆர்வமுடன் கேட்டாள் மித்ரா.''திருச்சி மாவட்டத்துக்காரரு நம்மூருக்கு வர்றாராம். அவர பத்திதான் இப்ப கலெக்டர் ஆபீஸ் முழுக்க பேச்சா இருக்குது. அவர், உள்ளாட்சித்துறையில ஏற்கனவே வேலை பார்த்தவர். உள்ளூர் அமைச்சருக்கும் நல்ல அறிமுகம் இருக்குது; அவர் வரத்தான் வாய்ப்பு அதிகம்னு பேசிக்கிறாங்க'' என்றாள் சித்ரா.''அப்படியா''''எலக் ஷன் வர்றதால, எப்படியும் நாம மாறப்போறோம்னு நெனச்சுட்டு பெரிய அதிகாரிங்க பல பேர், வேலை பார்க்காம சும்மா சுத்தறாங்களாம். இதனால, முதியோர் ஓய்வூதியம், பட்டா மாறுதல் மாதிரி வேலைகள்ளாம் அப்படியே 'பெண்டிங்'ல கெடக்குதாம்'' என்றாள் சித்ரா.''பரவாயில்லையே... காய்ச்சல்ல வீட்டுல படுத்திருந்தாலும், எல்லா மேட்டரையும் 'அப்டேட்' பண்ணி வச்சிருக்கே....வெரிகுட்''- பாராட்டு பத்திரம் வாசித்த மித்ரா, சித்ராவின் தாய் கொண்டு வந்த சுக்கு காபியை, உறிஞ்சி குடித்தாள்.''பொணத்துகிட்டயே ஆட்டைய போட்ட போலீஸ் பத்தி தெரியுமா,'' என அடுத்த விஷயத்துக்கு தாவினாள் மித்ரா.''இது எங்க நடந்த கூத்து. செத்தவங்க கிட்ட எப்படி திருட முடியும்,'' என, கேட்டாள் சித்ரா'.''போன வாரம் பேரூர் பகுதியில 2ம் நம்பர் பஸ் திரும்பும் போது ஒரு ஆக்சிடென்ட் நடந்துச்சு. விபத்துல காயமடைஞ்ச சரவணன்ங்கறவரை, பக்கத்துல இருந்தவங்க ஜி.எச்.,க்கு அனுப்பி வச்சாங்க. அப்ப அவரோட வாட்ச், மோதிரத்தை பேரூர் செட்டிபாளையம் போலீஸ்கிட்ட குடுத்திருக்காங்க. காயமடைஞ்ச சரவணன் பிழைக்கலை''''அடடே... அப்புறம்?''''நொந்து போன அவரோட பேமிலிகாரங்க, அவரோட ஞாபகார்த்தமா வச்சிக்கிறதுக்காக, பேரூர் செட்டிபாளையம் போலீஸ்கிட்ட மோதிரம், வாட்சை கேட்டிருக்காங்க. ஆனால், போலீசாரோ, 'அப்படி எதுவும் எங்ககிட்ட இல்லை; ஆதாரம் இருந்தால் எடுத்துட்டு வாங்க' ன்னு சொல்லிட்டாங்களாம்''''அக்கிரமம்''''மேல கேளு.... தொடர்ந்து, 'நாங்க திருடிட்டோம்னு சொல்றீங்களா' ன்னு கேட்டு சரவணன் ரிலேட்டிவ்சை மிரட்டியிருக்காங்க. அவங்க வேற வழியில்லாம பேசாம போயிட்டாங்களாம்,'' என முடித்தாள் மித்ரா.''அடேங்கப்பா, இதுக்கு திருடனுங்க பரவாயில்லை போலிருக்கே'' என்றாள் சித்ரா.''கோயமுத்துார் கார்ப்பரேஷன்ல, குப்பை அள்ளுறதுல, இன்னும் எவ்ளோ நாளைக்கு தான் காசு அள்ளுவாங்கன்னு, தெரியலை...'' என்று அடுத்த மேட்டருக்குள் நுழைந்தாள் மித்ரா.''இப்ப, எத்தனை கோடிக்கு 'பிளான்' போட்டுருக்காங்க...'' என்று கேட்டாள் சித்ரா.அதற்கு மித்ரா, ''பேட்டரி கார் வாங்குறதுக்கு ரூ.14.33 கோடி, 'மினி' ஆட்டோ வாங்குறதுக்கு ரூ.5.71 கோடி, குப்பையில இருந்து இயற்கை உரம் தயாரிக்க, எம்.சி.சி., பிளான்ட் அமைக்க ரூ.37.26 கோடி, தோட்டக்கழிவை உரமாக்கற மையம் அமைக்க, ரூ.20 கோடின்னு, கிட்டத்தட்ட, ரூ.80 கோடிக்கு 'பிளான்' போட்டு, வேலை பார்த்துட்டு இருக்காங்க... ஆனா, எந்த ரோட்டுல போனாலும், குப்பைதான் கெடக்குது...'' என்றாள்.உடனே சித்ரா, ''குப்பைன்னு சொல்லி, ரோட்டுல வீசுறோம்; அதை எடுக்குறதுல, இவ்ளோ, 'கரன்சி'யை எடுக்குறாங்களா... இதுமட்டுமில்ல... 'டுரிப்' திட்டத்துல, 40 கோடி ரூபா ஒதுக்கியிருக்காங்க... ரோடெல்லாம் குண்டும் குழியுமா இருக்கு... ரோடு போடுவாங்களா... அல்லது, அந்த தொகையையும் அமுக்கிடுவாங்களான்னு தெரியலை...'' என்ற நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.''நம்ம சி.இ.ஓ., வருத்தத்துல இருக்காராம்... கேள்விப்பட்டியா?'' - கேட்டாள் மித்ரா.''ஏன்... என்னாச்சு?'' -ஆர்வமுடன் கேட்டாள் சித்ரா.''சி.பி.எஸ்.இ., ஸ்கூல்களுக்கான ஆய்வு கூட்டம் சமீபத்துல சி.இ.ஓ., தலைமையில நடந்துச்சு. இதுல, 55 ஸ்கூல்ல இருந்து மட்டுந்தான் கலந்துக்கிட்டாங்களாம். அதுவும், சில ஸ்கூல் சார்புல, ஆபீஸ் ஸ்டாப் மட்டும்தான் கலந்துக்கிட்டாங்களாம். பிரின்ஸ்பால் கலந்துக்கலையாம்''''ஓகோ''''அதனால கடுப்பான சி.இ.ஓ., வட்டார வாரியா செயல்படுற, சி.பி.எஸ்.இ., ஸ்கூல்கள் பட்டியல், உரிமம் குறித்த டீட்டெயிலெல்லாம் திரட்ட, ரகசியமா உத்தரவு போட்டுருக்காராம்'' என்றாள் மித்ரா.''கவர்மென்ட் ஸ்கூல் டீச்சர்ஸ் பிரச்னையெல்லாம் முடிஞ்சுருச்சா?'' என்று கேட்டாள் சித்ரா.'' எங்கே முடிஞ்சது... இனி வர்ற காலங்கள்ல, போராட்டம் நடத்துறது பத்தி, பிரஸ்கிட்ட யாராவது பேட்டி குடுத்தால், டிரான்ஸ்பர் உறுதின்னு, முக்கிய சங்க உறுப்பினர்கள்கிட்ட சொல்லிருங்கன்னு, தலைமையாசிரியர்களுக்கு சி.இ.ஓ., உத்தரவு போட்டுருக்காராம்'' என்றாள் மித்ரா.''கல்வி மாவட்டங்கள்ல எல்லாம் பொறுப்பு அதிகாரிங்க அட்டகாசம் தாங்கலைன்னு கேள்விப்பட்டேனே... உண்மையா?''''உண்மைதான். மூணு கல்வி மாவட்டத்துலயும் பொறுப்பு அதிகாரிங்கதான் இருக்காங்க. இதுல, ஒரு பெண் அதிகாரி, தனக்கு எதிரா புகார் ஏதும் குடுக்க கூடாதுன்னு, பிரைவேட் ஸ்கூல் பிரின்சிபால், டீச்சர்ஸ், ஆபிஸ் ஸ்டாப்கள மிரட்டுறாராம். இவருக்கு, நம்மூரு பழைய தேர்வுத்துறை டைரக்டர் ஒருத்தர் சப்போர்ட்டாம்'' என்றாள் மித்ரா.அப்போது 'டிவி' யில் சின்னதம்பி யானையின் பரிதாப நிலை குறித்து செய்தி ஓடியது. அதைப்பார்த்த சித்ரா, ''இந்த யானையை வெச்சு 'பப்ளிசிட்டி' தேடிக்குறதுல, வன ஆர்வலர்களுக்கு மத்தியில கடும் போட்டி இருக்கும் போலிருக்கே...'' என்றாள்.அதற்கு மித்ரா, ''உண்மைதான். இதனால யானைகளுக்கு நல்லது நடக்குதோ இல்லையோ,இவங்களுக்கு ஏகப்பட்ட விளம்பரம் கிடைக்குது. 'டிவி', பேப்பர்னு ஏகப்பட்ட பப்ளிசிட்டி கிடைக்கறதால, வன ஆர்வலர்ன்னு சொல்லிக்கிட்டு ஏகப்பட்ட பேர் கிளம்பிட்டாங்க. இவங்கள்ல சில பேரு, பாரஸ்ட் ஆபிசர்சை மிரட்டி, காட்டுக்குள்ளே போய் தண்ணியடிக்கற கோஷ்டிங்க'' என்றாள்.''ஆனா அவங்களோட கெட்ட காலமோ என்னவோ, சின்னதம்பி மடத்துக்குளம் பக்கம் போயிருச்சு; விளம்பரத்துக்கு என்ன செய்றதுன்னு தெரியாம, இந்த திடீர் வன ஆர்வலருங்கள்லாம் தவியா தவிக்கறாங்க'' என்று கூறி சிரித்தாள்.அதைக் கேட்டு வாய் விட்டு சிரித்த மித்ரா, ''சரி... சரி. நான் கிளம்பறேன். டேக் கேர்'' என்றவாறு கிளம்பினாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X