கோவை:கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, பக்தர்கள் முன்னிலையில் நேற்று தொடங்கியது.கோவை மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும், மாசி மாதம் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுதிருவிழா, நேற்று கோலாகலமாக தொடங்கியது. முதலாவதாக, தேர் முகூர்த்தகால் பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.வரும், 19ம் தேதி இரவு, 7 மணிக்கு பூச்சாட்டு, 25ல் கிராம சாந்தி, 26ல் கொடியேற்றம், அக்னி சாட்டு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 27 முதல் மார்ச் 4 வரை, அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மார்ச் 6ல் திருத்தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் தக்கார் விமலா, செயல் அலுவலர் கைலாஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.