வலிப்பு நோயாளிகள் வச்சுக்கணும் 'கார்டு!' விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வலிப்பு நோயாளிகள் வச்சுக்கணும் 'கார்டு!' விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

Updated : பிப் 12, 2019 | Added : பிப் 12, 2019
Advertisement
 வலிப்பு நோயாளிகள் வச்சுக்கணும் 'கார்டு!' விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

கோவை: கோவை நியூரலாஜிக்கல் சொசைட்டி, கோவை அரசு மருத்துவமனை சார்பில், சர்வதேச வலிப்பு நோய் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

அதில், கோவை அரசு மருத்துவமனை நரம்பியல் துறை தலைவர் ஷோபனா கூறியதாவது:உலகம் முழுக்க, 6.5 கோடி பேர் வலிப்பு நோயுடன் வாழ்கின்றனர். இந்நோய் பெரு மூளையில் ஏற்படும் பாதிப்பால், ஏற்படும் ஒரு பிரச்னை. ஒரு முறை வருவது வலிப்பு; பலமுறை வந்தால் அது வலிப்பு நோய். தொடர்ந்து மருந்துகள் உட்கொள்ளும் போது இந்நோய் குணமடையும். குழந்தைகளுக்கு மரபு ரீதியாகவும், முதியவர்களுக்கு அதிர்ச்சி, தலைக்காயம், ரத்தக்குழாயில் பிரச்னை, ஆகியவற்றால், வலிப்பு நோய் ஏற்படுகிறது.
அரசு மருத்துவமனைகளில் இந்நோயை குணப்படுத்த தேவையான, அனைத்து வசதிகளும் உள்ளன.பாதிப்பு இருப்பது தெரிந்தால், டாக்டரிடம் பரிசோதனை செய்ய வேண்டும். இந்நோய் பாதிப்பு உள்ளவர்கள் தங்களுக்கான பிரத்யேக அடையாள அட்டை அல்லது கையில் பட்டை அணிந்திருப்பது அவசியம். இதன் மூலம் அவர்களுக்கு விரைவான சிகிச்சை கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

முன்னதாக, பேரணியை மருத்துவமனை டீன் அசோகன் துவக்கி வைத்தார். நியூரலாஜிக்கல் சொசைட்டி தலைவர் பாஸ்கர், செயலாளர் ராஜேஷ்பாபு, கோவை அரசு மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X