யார் விழுந்தால் என்ன...| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

யார் விழுந்தால் என்ன...

Added : பிப் 12, 2019
Advertisement
 யார் விழுந்தால் என்ன...

சாலையில் பள்ளம்சிங்காநல்லுார் சிக்னல் அருகே கிழக்குப்பகுதியில், சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளத்தில், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர்.-கிருஷ்ணகுமார், சிங்காநல்லுார்.

குடிநீர் வீண்பேரூர் ரோடு, எல்.ஐ.சி., காலனி பஸ் ஸ்டாப் அருகில், குழாய் உடைப்பால், குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது.-சங்கர், எல்.ஐ.சி., காலனி.

சாக்கடை கால்வாய் அடைப்புவெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால்பாளையம், அற்புதம் நகர், மூன்றாவது வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கியுள்ளது.-கண்ணன்,

வெள்ளலுார் ரோடு.

விளக்குகள் எரிவதில்லைபொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி - செட்டிபாளையம் சாலையில் உள்ள எல் அண்ட் டி வளாகம் வரை தெருவிளக்குகள் எரிவதில்லை.-சாந்தி, ஈச்சனாரி ரோடு.

ஆக்கிரமிப்பால் அவதிமேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் சிக்னல் சந்திப்பில், சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.-சுந்தரமூர்த்தி, தொண்டாமுத்துார்.

குண்டும் குழியுமான ரோடுஆர்.எஸ்.புரம், வெங்கடகிருஷ்ணா ரோடு (மேற்கு), மாருதி ஓட்டல் அருகில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது.-சங்கரநாராயணன், வெங்கடகிருஷ்ணா ரோடு.

ஆக்கிரமிப்பை அகற்றணும்ஒண்டிப்புதுார், விநாயகர் கோவில் வீதியில், ஆக்கிரமிப்பு கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு, பலமுறை கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை.-வடிவேல், ஒண்டிப்புதுார்.

துார்வாரணும்!வடவள்ளி, கஸ்துாரிநாயக்கன்பாளையம், நேதாஜி வீதியில், சாக்கடை கால்வாயை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஹரீஷ், வடவள்ளி.

சாலையை சீரமைக்கணும்!கவுண்டம்பாளையம், சக்தி நகர், இரண்டாவது கிராஸ் பிரிவில் உள்ள, தரைப்பாலம் அருகில் சாலை சிதிலமடைந்துள்ளது.- கண்ணப்பன், கவுண்டம்பாளையம்.

தண்ணீர் பற்றாக்குறைகுறிச்சி, வெங்கடாசலபதி நகர், பூங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில், போர்வெல் தண்ணீர் வாரம் ஒருமுறை மட்டுமே வினியோகிக்கப்படுகிறது.-ரமணி, குறிச்சி.

விளக்கு எரிவதில்லைஜி.என்.மில், சுப்ரமணியம்பாளையம், அண்ணா ஆசிரியர்கள் குடியிருப்பில், தெருவிளக்குகள் எரிவதில்லை.- ஜெயராமன்,

ஜெ.எம்.வி., கார்டன்.

துாசு நிறைந்த மோசமான சாலை! விளாங்குறிச்சி ரோடு, எப்.சி.ஐ.நகர், உருமாண்டம்பாளையம் ரோட்டில், குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி, முழுவதும் மூடாமல் உள்ளது.-ராஜ்குமார், உருமாண்டம்பாளையம்.

ரோடு படுமோசம்போக்குவரத்து அதிகம் உள்ள, சூலுார் - இருகூர் சாலையில், ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் உள்ளன.- சந்திரன், சூலுார்.

வாகன ஓட்டிகள் திணறல்சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர், ஜே.டி., மருத்துவமனை முன், சாலை குண்டும் குழியுமாக உள்ளது.-சத்யா, காமராஜ் நகர்.

துர்நாற்றம்பாலக்காடு ரோடு, க.க.சாவடியில், சாலையோர கடைகளின் பின்புறம் கொட்டப்படும் ஓட்டல் கழிவுகள், முறையாக அப்புறப்படுத்தப்படுவதில்லை.-இஜாஸ்,

க.க.சாவடி.

போக்குவரத்து நெரிசல்சங்கனுார் ரோடு, அரசு பள்ளி அருகில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.- ராஜா, சங்கனுார்.

வேகத்தடை வேண்டும்மாச்சம்பாளையம் - ஞானபுரம் ரோடு, நிர்மல மாதா பள்ளி அருகில், குறுகலாக உள்ள சாலை வளைவில், தொடர் விபத்து ஏற்படுகிறது.-பத்மநாபன்,

சிறுவாணி நகர்.

போக்குவரத்து இடையூறுஉக்கடம் - சுங்கம் பை-பாஸ் ரோடு, அரசு போக்குவரத்துக்கழக டெப்போ அருகில், சாலையோரம் நிறுத்தப்படும், வாகனங்களால் போக்குவரத்து டையூறு ஏற்படுகிறது.-எட்வின், ரெட்பீல்ட்ஸ்.சாலையில் கழிவுநீர் தேக்கம்சுந்தராபுரம் முருகா நகர், சந்திரா மருத்துவமனை அருகில், சாக்கடை கால்வாய் உடைந்து கழிவுநீர் சாலையில் ஓடுகிறது.- நான்சி, முருகா நகர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X