'கழகங்கள் கைவிட்டாலும் கம்பன் கழகம் கைவிடாது'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கழகங்கள் கைவிட்டாலும் கம்பன் கழகம் கைவிடாது'

Added : பிப் 12, 2019
Advertisement

கோவை:கோவை கம்பன் கழகம் சார்பில், 47ம் ஆண்டு கம்பன் விழா, மணி மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடந்தது. தஞ்சை தமிழ்பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் திருமலை தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் பேச்சாளர் நாஞ்சில்சம்பத் பேசியதாவது:பல்வேறு மாவட்டங்களில் கம்பன் கழகம் நடத்தும் விழாக்களில், என்னை அழைத்து பேச வைக்கின்றனர். கழகங்கள் கை விட்டாலும், கம்பன் கழகம் என்னை கைவிடாது. தமிழின் தகுதியை தரணிக்கு உயர்த்தியவர் கம்பன். கம்பன் பற்றி, சம கால தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கிறது. அவருக்கு நிகர், இவ்வுலகில் முன்னும், பின்னும் யாரும் இல்லை.இவ்வாறு, நாஞ்சில் சம்பத் பேசினார்.நிகழ்ச்சியில், முனைவர் முருகேசன் எழுதிய, 'கம்பனில் தெய்வமும் மகனும்' என்ற நுால் வெளியிடப்பட்டது. இதில், கம்பன் கழக நிர்வாகிகள் செல்வபதி, பாலசுந்தரம், நஞ்சுண்டன், தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்க தலைவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X