விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை திட்டம்: விண்ணப்பம் பெறாததால் ஏமாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை திட்டம்: விண்ணப்பம் பெறாததால் ஏமாற்றம்

Added : பிப் 12, 2019
Advertisement

உடுமலை:சிறு, குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகை திட்டத்துக்கு, நேற்று விண்ணப்பங்கள் பெறப்படாததால், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.மத்திய அரசு சிறு, குறு விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவித்தது. இதற்கான பணிகளை உடனடியாக துவக்க, மாநில அரசும், வருவாய்த்துறை மற்றும் வேளாண்துறையினருக்கு உத்தரவிட்டது.அதன்படி, நேற்று முதல், வி.ஏ.ஓ., அலுவலகங்களில், விண்ணப்ப படிவங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சிறு, குறு விவசாயிகள் தங்கள் விளைநிலத்துக்கான சிட்டா, வங்கிக்கணக்கு பாஸ் புக் நகல், ஆதார் எண் உட்பட விபரங்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.இது குறித்து, சமூகவலைத்தளங்களில் பல்வேறு தகவல்களும் பரவின. ஆனால், விண்ணப்ப படிவம் கூட, வருவாய்த்துறையினருக்கு முறையாக வழங்கப்படவில்லை.உடுமலை தாலுகா விவசாயிகள், நேற்று தேவையான ஆவணங்களுடன், வி.ஏ.ஓ., அலுவலகத்தில், திரண்டனர். ஆனால், 'விண்ணப்பம் பெறுவது; விண்ணப்ப படிவம் வினியோகம் உட்பட பணிகளுக்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படவில்லை,' என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.வருவாய்த்துறையினர் கூறுகையில், 'முதற்கட்டமாக வருவாய் கிராமத்திலுள்ள, சிறு, குறு விவசாயிகளின் பட்டியல், கிராம ஆவணங்களின்படி தயாரிக்கப்படுகிறது. ஊக்கத்தொகை பெற விண்ணப்பங்கள் பெறுவது குறித்த வழிகாட்டுதல்களை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வழங்கியதும், அடுத்த கட்ட பணிகள் துவங்கும். தகுதியான விவசாயிகள் விடுபடாமல் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்,' என்றனர். திட்டத்துக்கான விண்ணப்பங்களை பெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்தது. இதில், வருவாய்த்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.அங்கு அளிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை, வருவாய்த்துறையினர், அனைத்து வி.ஏ.ஓ.,க்களுக்கும், தெரிவித்துள்ளனர். எனவே, இன்று முதல் முழு வீச்சில், விண்ணப்பங்கள் பெறப்படும் என வருவாய்த்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X