அறுவடை சீசனில் நிலையான பருத்தி விலை: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அறுவடை சீசனில் நிலையான பருத்தி விலை: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : பிப் 12, 2019
Advertisement

உடுமலை:அறுவடை சீசனில், பருத்தி விலை நிலையாக இருக்க, மத்திய பருத்தி கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், பருத்தி சாகுபடி முன்பு பிரதானமாக இருந்தது. நேரடி கொள்முதல் மற்றும் உள்ளூரிலேயே ஜின்னிங் மற்றும் ஸ்பின்னிங் மில்கள் இயங்கியதால், பருத்திக்கு நிலையான விலையும் கிடைத்து வந்தது. பல்வேறு காரணங்களால், பருத்தி சாகுபடியை விவசாயிகள் கைவிட துவங்கிய நிலையில், பெரும்பாலான மில்களும் மூடப்பட்டன.கடந்த சில ஆண்டுகளாக, பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கும், மானாவாரியாகவும் பருத்தி சாகுபடி செய்ய, விவசாயிகள் ஆர்வம் காட்டத்துவங்கியுள்ளனர். கடந்த இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, உடுமலை சுற்றுப்பகுதியில், பரவலாக மேற்கொள்ளப்பட்ட பருத்தி சாகுபடியில், தற்போது, அறுவடை துவங்கியுள்ளது. தற்போதைய சீசனில், ஸ்பின்னிங் மில், நிர்வாகத்தினர், விவசாயிகளிடமிருந்து, நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.இதனால், பருத்திக்கு நிலையான விலை கிடைத்து வருகிறது. மிக நீண்ட இழை பருத்தி ரகத்துக்கு, கிலோவுக்கு, தரம் மற்றும் ரகத்தின் அடிப்படையில், 55 முதல் 62 ரூபாய் வரை விலை கிடைத்து வருகிறது. விவசாயிகள் கூறுகையில், 'நீண்ட இடைவெளிக்கு பிறகு பருத்தி சாகுபடி செய்துள்ளோம். ஏக்கருக்கு, முன்பு, 15 குவிண்டால் வரை விளைச்சல் கிடைத்து வந்தது. சந்தையில் விலை நிலவரம் சீராக இருக்க மத்திய பருத்திக்கழகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.தட்டுப்பாட்டால் திணறல்பருத்தி சாகுபடிக்கு தேவையான தொழிலாளர்கள் கிடைக்காமல், விவசாயிகள் திணறி வருகின்றனர். தற்போது, மக்காச்சோளம், கொத்தமல்லி, கொண்டைக்கடலை சாகுபடியில், அறுவடை துவங்கியுள்ளதால், தொழிலாளர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதற்கு தீர்வாக, பருத்தி பறிக்கும் இயந்திரத்தை பயன்படுத்த, வேளாண்துறையினர் வழிகாட்டுதல் வழங்குகின்றனர்.இந்த இயந்திரம், தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கத்தின் கீழ், மானிய விலையில் வழங்கப்படுகிறது. ஒரு இயந்திரத்துக்கு, 50 சதவீத மானியத்தில், 4,250 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. இது குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடையே வேளாண்துறையினர் ஏற்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X