அன்னாசி விளைச்சல் அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அன்னாசி விளைச்சல் அதிகரிப்பு

Added : பிப் 12, 2019
Advertisement
 அன்னாசி விளைச்சல் அதிகரிப்பு

காஞ்சிபுரம்:கேரளாவில், சீசன் துவங்கியதை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில், 100 ரூபாய்க்கு, ஐந்து அன்னாசி பழங்கள் விற்கப்படுகின்றன.பைனாப்பிள் எனப்படும் அன்னாசி பழம், தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி போன்ற மலை பிரதேசம் மற்றும் குமரி மாவட்டத்திலும் பயிரிடப்படுகிறது.தற்போது, கேரளாவில், விளைச்சல் அதிகரித்துள்ளதால், காஞ்சிபுரத்தில், ஐந்து அன்னாசி பழங்கள், 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இதுகுறித்து, திருச்சூரை சேர்ந்த, அன்னாசி பழ வியாபாரி, அஷ்ரப் கூறியதாவது:கேரளா மாநிலத்தில், பாலக்காடு, எர்ணாகுளம், கோட்டயம், எரிமேளி உள்ளிட்ட மலை பகுதிகளில், அன்னாசி பழம் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது.தற்போது சீசன் துவங்கி, விளைச்சல் அதிகரிப்பால், தமிழகம் முழுவதும் நேரிடையாக விற்பனை செய்து வருகிறோம். மூன்று பெரிய பழம், 100 ரூபாய்; மீடியம் சைஸ், நான்கு பழம், 100 ரூபாய்; சிறிய அளவு, ஐந்து பழம், 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.முகூர்த்த நாட்கள் என்பதால், சீர்வரிசை செய்வோர், அதிகளவு வாங்கிச் செல்கின்றனர். சில்லரை விற்பனையும் திருப்திகரமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X