சுருக்குமடி வலைகள் பறிமுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுருக்குமடி வலைகள் பறிமுதல்

Added : பிப் 12, 2019
Advertisement

மாமல்லபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட சுருக்குமடி மீன்பிடி வலைகள், படகுகள் பறிமுதலை, மீன்வளத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.மீனவர்கள், அரசு அங்கீகரித்த மீன்பிடி வலைகளை மட்டுமே பயன்படுத்தி, கடலில் மீன்பிடிக்க அனுமதி உண்டு.அரசு தடை செய்த சுருக்குமடி வலைகளை, மீன்பிடிக்கு பயன்படுத்த கூடாது. சுருக்குமடி வலைகள், ஓரிட மீன்களை மொத்தமாக உள்ளிழுப்பதால், அடுத்தடுத்து மீன்பிடிக்க முயலும் மற்றவர்களுக்கு, மீன்கள் கிடைப்பதில்லை. எனவே, இவ்வகை வலைகள் தடை செய்யப்பட்டன.காஞ்சிபுரம் மாவட்டத்தில், பகுதிக்கு சிலர், தடையை மீறி, இவ்வலையில் மீன்கள் பிடிக்கின்றனர். அரசு தொடர்ந்து எச்சரித்தும், மீன்பிடிப்பது தொடர்கிறது. இந்நிலையில், மீன்வளத் துறையினர், இவ்வலைகளை தற்போது பறிமுதல் செய்ய, தீவிரம் காட்டுகின்றனர்.இதுகுறித்து, மீன்வளத் துறையினர் கூறியதாவது:சுருக்குமடி வலைகளை, அரசு தடை செய்தும், பலர் இதில் மீன் பிடிக்கின்றனர். சில நாட்களாக, பனையூர், கோகிலமேடு பகுதிகளில், வலைகள், படகுகள் பறிமுதல் செய்தோம்.அனைத்து பகுதிகளிலும், சோதனை நடத்தி, இவ்வலைகள், படகுகள், மீன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்வோம்.கடலோர பாதுகாப்பு போலீசாரும், கடலில் சோதனை நடத்தி, சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்து, எங்களிடம் ஒப்படைக்கலாம். அப்போதுதான், இந்த வலைகளை பயன்படுத்த, அச்சப்படுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X