முகூர்த்த நாளில் மனை வாங்க ஆர்வம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முகூர்த்த நாளில் மனை வாங்க ஆர்வம்

Added : பிப் 12, 2019
Advertisement

திருப்போரூர்:திருப்போரூர் அருகே, முகூர்த்த நாளில் மனை பிரிவு, அடுக்குமாடி வீடுகள் வாங்குதலில் மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில், கோவில் நகரமாகவும், சுற்றுலா பகுதியாகவும், போக்குவரத்து வசதியுள்ள பகுதியாகவும், திருப்போரூர் மாறிஉள்ளது.இதனால், திருப்போரூர் மற்றும் அதன் அருகே உள்ள தண்டலம், கண்ணகப்பட்டு, இள்ளளூர் உள்ளிட்ட பகுதிகளில் டி.டி.சி.பி., அனுமதியுடன்கூடிய மனை பிரிவுகள், அடுக்குமாடிகள் கட்டி கொடுக்கும் பணிகள் மூழுவீச்சில் நடந்து வருகின்றன.நேற்று முன்தினம், ரேவதி நட்சத்திரம், முக்கிய சுபமூகூர்த்த நாள் என்பதால் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்றதோடு, புதிய மனைகள் வாங்குதல், புதிய மனை பிரிவு இடங்களை சென்று பார்த்தல் என, அதிகமானோர் அந்தந்த பகுதிகளில் ஆர்வமுடன் வந்து இருந்தனர்.மனை பிரிவு விளம்பரங்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவும், கூடுதலாக மக்கள் கூட்டத்தை வரவேற்றிருந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X