மாமல்லபுரம்:கல்வி சுற்றுலாவாக, பள்ளி மாணவ - மாணவியர், மாமல்லபுரத்தில் குவிகின்றனர்.மாமல்லபுரம், பாரம்பரிய சிற்பக்கலை இடமாக விளங்குகிறது. இவ்வூர், பல்லவ பாறை சிற்பங்களை காண, உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணியர், சுற்றுலா வருகின்றனர்.இது ஒருபுறமிருக்க, சென்னை மற்றும் சுற்றுப்புற, பிற மாவட்ட பள்ளி மாணவ - மாணவியர், ஆண்டு இறுதி தேர்விற்கு முன், பிப்.,ல், கல்வி சுற்றுலாவாக, இங்கு குவிவர். பள்ளிகளில், இறுதித்தேர்விற்கு தயாராகும் நிலையில், தற்போது அவர்கள், இங்கு குவிகின்றனர்.ஆசிரியர் குழுவினருடன், தனி பேருந்துகளில் வந்து, சிற்பங்கள், கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம் ஆகியவற்றை கண்டு மகிழ்கின்றனர். இதுகுறித்து, ஆசிரியர்கள் விளக்குவதை அறிந்து, வியக்கின்றனர்.