பாதுகாப்பில்லாத திறந்தவெளி கிணறுகள்: மேல்மூடி அமைக்க எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பில்லாத திறந்தவெளி கிணறுகள்: மேல்மூடி அமைக்க எதிர்பார்ப்பு

Added : பிப் 12, 2019
Advertisement
 பாதுகாப்பில்லாத திறந்தவெளி கிணறுகள்: மேல்மூடி அமைக்க எதிர்பார்ப்பு

மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில், பாதுகாப்பின்றி உள்ள திறந்தவெளி மற்றும் தரைமட்ட கிணறுகளுக்கு மேல்மூடி அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பல ஆண்டுகளுக்கு முன், மக்களின் குடிநீர் தேவைகளை கிணறுகள் தான் ஈடு செய்தன. தற்போதைய நாட்களில் ஆழ்குழாய் அமைத்தும், மின்மோட்டார் மூலமும், நீர் வினியோகம் நடக்கிறது.இதனால் பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்ட பல கிணறுகள் பாழடைந்து பாதுகாப்பின்றி காணப்படுகிறது. ரோடு ஓரம், வீடுகளுக்கு மத்தியில், பொது இடங்கள் பள்ளி அருகில், ஆபத்தான நிலையிலுள்ள கிணறுகளால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'இரவு நேரங்களில் இந்தப்பகுதியை கடக்கும் மக்கள் மற்றும் வெளியூரிலிருந்து வரும் நபர்கள், விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் கவனக்குறைவால், நிலை தடுமாறி கிணற்றில் தவறி விழுந்து விட வாய்ப்பு உள்ளது. அரசு நடவடிக்கை மேற்கொண்டு ஆபத்தான கிணறுகளுக்கு மேல்மூடி அமைக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X