காஞ்சிபுரம், நிமந்தகார ஒற்றைவாடை தெருவில், அபிராமசுந்தரி உடனாகிய அமரேஸ்வரர் கோவிலில், புதிதாக மூஷிகம், ரிஷபம், அன்ன வாகனம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்களின் கரிகோல் விழா, பிப்., 17ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, நடைபெறுகிறது. கோவிலில் இருந்து புறப்பட்டு, நான்கு ராஜ வீதிகள் வழியாக உலா வருகிறது. மாசி மக உற்சவத்தில், புதிய வாகனத்தில், சுவாமி வீதியுலா நடைபெறும்.