செங்கல்பட்டில் ரயில் மறியல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செங்கல்பட்டில் ரயில் மறியல்

Added : பிப் 12, 2019
Advertisement

செங்கல்பட்டு:ரயில்கள் சரியான நேரத்திற்கு, இயக்கப்பட வேண்டும் என கோரி, ரயில் மறியல் போராட்டம், நேற்று, நடைபெற்றது.செங்கல்பட்டு ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. திருமால்பூரிலிருந்து, கடற்கரை செல்லும் ரயில்கள், செங்கல்பட்டு வழியாக, செல்கின்றன.நேற்று காலை, 9:05 மணிக்கு, திருமால்பூரிலிருந்து, கடற்கரை செல்லும் மின்சார ரயில், காலை, 9:45 மணிக்கு, வந்தடைந்தது.இதனால், ஆத்திரமடைந்த ரயில் பயணியர், மின்சார ரயிலை மறித்து, ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள், போராட்டம் நடத்தியவர்களிடம், பேச்சு நடத்தினர்.அப்போது, பயணியர், 'திருமால்பூரிலிருந்து, சென்னை செல்லும் மின்சார ரயில்கள், சரியான நேரத்திற்கு இயக்கப்பட வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.அதன் பின், வாலாஜாபாத் அருகில், கார்கள் ஏற்ற சென்ற, சரக்கு ரயில் சென்றதால், மின்சார ரயில் செல்வதற்கு தாமதம் ஏற்பட்டது.'ரயில்கள் குறித்த நேரத்தில் செல்ல, நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள், கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X