செங்கல்பட்டில் காவல் உதவி மையம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செங்கல்பட்டில் காவல் உதவி மையம்

Added : பிப் 12, 2019
Advertisement

செங்கல்பட்டு:செங்கல்பட்டு புறவழிபாதையில், காவல் உதவி மையம் அமைகிறது.சென்னையிலிருந்து, தென்மாவட்டங்களுக்கும், தென் மாவட்டத்திலிருந்து சென்னைக்கும், அரசு பேருந்துகள் உட்பட பல்வேறு தனியார் பேருந்துகள், செங்கல்பட்டு வழியே செல்கின்றன. காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், மேம்பாலம் அருகில், புறவழிபாதையில், அனைத்து பேருந்துகளும் நின்று செல்கின்றன.இங்கு, வெளியூர் செல்லும் பயணிகளும், வரும் பயணிகளும், பேருந்தில் இருந்து இறங்கி, நகருக்கு செல்கின்றனர். இரவு நேரங்களிலும், பெண்கள் தனியாக நடந்து செல்கின்றனர்.அப்போது, பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் நடைபெறுகிறது. நகருக்கு வரும் ரவுடிகள், கொள்ளையன்களை கண்காணிக்க, போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.இதனால், நகரில் குற்ற சம்பவங்கள் நிகழமால் இருக்க, புறவழிபாதையில், காவல் உதவி மையம் அமைக்கப்பட வேண்டும் என, நமது நாளிதழில் பல முறை செய்திகள் வெளியாயின. அதையடுத்து, மகேந்திரா வேர்ல்டு சிட்டியில் உள்ள தனியார் நிறுவனம், காவல் உதவி மையம் அமைக்க நிதியுதவி அளித்துள்ளது. அதற்கான பணிகள் துவங்கியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X