மாமல்லபுரம் புதைவடத்தில் மின் இணைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாமல்லபுரம் புதைவடத்தில் மின் இணைப்பு

Added : பிப் 12, 2019
Advertisement

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், புதிய புதைவடத்திற்கு, மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.மாமல்லபுரம், சர்வதேச பாரம்பரிய கலை சுற்றுலா இடமாக விளங்குகிறது. இவ்வூர் பாறை சிற்பங்களை காண, பயணியர் குவியும் நிலையில், மின்தடை, மின்னழுத்த குறைபாடு பிரச்னைகளால்,சுற்றுலா சார்பு தொழில்கள் பாதிக்கப்பட்டன.இது ஒருபுறமிருக்க, கடலோர பகுதியானதால், புயல், சூறாவளி உள்ளிட்ட இயற்கை பேரிடரின்போது, கம்பம் விழுந்து, கம்பி அறுந்து, மின்மாற்றி பழுதாகி, மின்சாரம் தடைப்படுகிறது.எனவே, மத்தியஅரசின், ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், 10.19 கோடி ரூபாய் மதிப்பில், கடந்த ஆண்டு மேம்பாட்டு பணிகள் துவக்கப்பட்டன.மேலும், 100 கி.வா., மின்திறனில், இரண்டு; 63 கி.வா., மின்திறனில், 35; 25 கி.வா., மின்திறனில், 10 என, மொத்தம், 47 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன.பூஞ்சேரி துணை மின் நிலையத்திலிருந்து, மாமல்லபுரம், ஐந்துரதங்கள், தேவனேரி என, மூன்று பிரிவு தடங்களில், 27 கி.மீ., உயரழுத்தபுதைவடம், 35 கி.மீ., தாழ்வழுத்த புதைவடம் என, அமைகின்றன.தற்போது, உயரழுத்த புதைவட பணி முடிந்து, மின் இணைப்பு வழங்கப்பட்டது.மேற்பார்வை பொறியாளர் சுரேஷ்குமார், மின் இணைப்பை துவக்கி வைக்க, செயற்பொறியாளர் மனோகரன், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் வினோத்குமார் உட்பட, பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X