செஞ்சேரிமலை ரோட்டில் அபாய வளைவு: மேம்படுத்துவது எப்போது?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செஞ்சேரிமலை ரோட்டில் அபாய வளைவு: மேம்படுத்துவது எப்போது?

Added : பிப் 12, 2019
Advertisement

உடுமலை:செஞ்சேரிமலை ரோட்டில், அபாய வளைவுகள் மேம்படுத்தப்படாமல் இருப்பதால், விபத்துகள் அதிகரித்துள்ளது.உடுமலையில் இருந்து குறிஞ்சேரி, புக்குளம், பெதப்பம்பட்டி வழியாக செஞ்சேரிமலை செல்லும் ரோடு, மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவில் பராமரிக்கப்படுகிறது. காற்றாலைகள் மற்றும் நுாற்பாலைகள் அதிகம் அமைந்துள்ள பகுதி வழியாக இந்த ரோடு செல்கிறது. நீண்ட காலமாக இந்த ரோடு ஒருவழித்தடமாக இருந்தது. விரிவாக்கம் செய்யப் படாததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.நீண்ட இழுபறிக்குப்பிறகு, சில ஆண்டுகளுக்கு, முன், குறிப்பிட்ட துாரம் ரோடு இடைவழித்தடமாக விரிவாக்கப்பட்டது. இருப்பினும், இந்த ரோட்டிலுள்ள அபாய வளைவுகள் மேம்படுத்தப்படவில்லை.குறிப்பாக, ஏரிப்பாளையம் பாலம், புக்குளம், பொட்டையம்பாளையம் பிரிவு, வெள்ளியம்பாளையம் பிரிவு, பொட்டிநாயக்கனுார் பிரிவு, மாலகோவில் அருகே, லிங்கமநாயக்கனுார் சந்திப்பு ஆகிய இடங்களில், 'எஸ்' வடிவிலான அபாய வளைவுகள் அமைந்துள்ளன.ரோடு விரிவாக்கத்தின் போது, இந்த வளைவுகளும் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நேற்றும், லிங்கமநாயக்கனுார் சந்திப்பில் விபத்து ஏற்பட்டது.சில இடங்களில் மட்டும் வளைவையொட்டிய பள்ளங்களில், கம்பித்தடுப்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது. இருப்பினும், அபாய வளைவுகளில் விபத்துகள் அதிகரித்துள்ளது.வளைவு பகுதியையொட்டியே பஸ் நிறுத்தங்கள் இருப்பதால், போக்குவரத்திலும் சிக்கல் ஏற்படுகிறது. உடுமலையில் இருந்து செஞ்சேரிமலை, சுல்தான்பேட்டை வழியாக கோவைக்கு செல்லும் வாகனங்கள் இந்த ரோட்டையே பயன்படுத்துகின்றன.இதனால், போக்கு வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. அபாய வளைவை மேம்படுத்துவதாக வாக்குறுதி அளித்த, மக்கள் பிரதிநிதிகளும், திட்டத்தை தற்போதாவது நினைவில் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X