காஞ்சிபுரம் தனி தொகுதிக்கு கடும் போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சிபுரம் தனி தொகுதிக்கு கடும் போட்டி

Added : பிப் 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement

- நமது நிருபர் -
வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், காஞ்சிபுரம் தனி தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில், காங்கிரஸ் மற்றும், ம.தி.மு.க., கட்சிகள், போட்டியிட விரும்புகின்றன. ஆனால், அந்த தொகுதியை விட்டுக் கொடுக்க, தி.மு.க., விரும்பவில்லை.வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் மற்றும் ம.தி.மு.க., கட்சிகளின் கூட்டு சேர்வது உறுதியாகி உள்ளது. விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அந்த கூட்டணியில் இடம் பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், காஞ்சிபுரம் தனி தொகுதியில் போட்டியிட, தி.மு.க., மட்டுமின்றி, ம.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளும் விருப்பம் தெரிவித்து வருகின்றன.இதனால், அந்தத் தொகுதியை யாருக்கு ஒதுக்குவது என்பதில், தி.மு.க.,விற்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும், சென்னைக்கு வெகு அருகில் உள்ள அந்த தொகுதியை, தி.மு.க., வைத்துக் கொண்டால், சவுகரியமாக இருக்கும் எனவும், அக்கட்சித் தலைமை கருதுகிறது.கடந்த, 2014ல் நடந்த தேர்தலில், தி.மு.க., சார்பில், வேடல் பகுதியை சேர்ந்த, கு.க.செல்வம் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனால், இந்த முறை அவரையே போட்டியிட செய்து வெற்றி பெற வைக்க வேண்டும் என, தி.மு.க.,வினர் விரும்புகின்றனர். கடந்த தேர்தலில், மக்கள் நலக்கூட்டணி சார்பில், ம.தி.மு.க.,வை சேர்ந்த, மல்லை சத்யா போட்டியிட்டார். தற்போது, தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., இடம் பெறும் என, எதிர்பார்க்கப்படுவதால், மல்லை சத்யாவுக்கு அந்த தொகுதியை வழங்க, ம.தி.மு.க., நெருக்கடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே, 2009 லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணி சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்ற, பெ.விஸ்வநாதனும் மீண்டும் இத்தொகுதியை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.கடந்த, ஐந்து ஆண்டுகளாக, அ.தி.மு.க., - எம்.பி.,யாக உள்ள மரகதம் மீது, தொகுதி மக்களுக்கு நல்ல பெயர் இருப்பதால், அவருக்கு சமமான வேட்பாளரை, கட்சிகள் தேடி வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
12-பிப்-201915:48:17 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj காஞ்சிபுரம் மகேந்திரபல்லவன் தெருவில் எம் பி மரகதம் அரசு நிதியினை ஐந்து லட்சம் பயன்படுத்தி வெறும் ஐம்பதாயிரம் ரூபாயில் சாக்கடை வாய்க்கால் கட்டி தெருவின் அக்காலத்தினையும் குறைத்து காஞ்சிபுரம் ஊராட்சியுடன் கூட்டு வைத்து பணம் தேவையின்றி வீணடிக்கப்பட்டு துர்நாற்றம் தெரு முழுக்க வீசிக்கொண்டே இருக்கிறது என்பதனை எத்துணையோ முறை கூறியும் தோண்டப்படட குழி மூடப்படவும் இல்லை வாய்க்கால் சாக்கடைநீர் வழிந்து போகிடாமல் தேங்கியே நிற்கிறது இதனை உடனடியாய் சரி செய்யவில்லையெனில் அவர் எங்கு நின்றாலும் பின்னடைவே ஏற்படும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X