பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கல்

Added : பிப் 12, 2019
Advertisement

உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் குறைத்தீர்க்கூட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்டத்தில், பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்ட முகாம் நடந்தது. முகாமில், புதிய வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு மற்றும் கிராமங்களில் குடிநீர் வசதி செய்து தருவது உள்ளிட்டவை தொடர்பாக, 264 மனுக்கள் பெறப்பட்டன.மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கலெக்டர் பழனிச்சாமி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, திருப்பூர் தெற்கு மற்றும் மடத்துக்குளம் வட்டங்களைச் சேர்ந்த, 11 பயனாளிகளுக்கு, சமூக பாதுகாப்பு திட்டத்தில் தலா 12 ஆயிரம் ரூபாய் வீதம், ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X