மின்னணு ஓட்டுப்பதிவு: விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின்னணு ஓட்டுப்பதிவு: விழிப்புணர்வு

Added : பிப் 12, 2019
Advertisement

காஞ்சிபுரம்:பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம், வருவாய் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கான பணிகள், தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஓட்டளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.காஞ்சிபுரம் மாவட் டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில், 410 மின்னணு ஓட்டளிக்கும் இயந்திரங்களை வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த துவங்கி உள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும், ஏழு குழுக்கள் தனித்தனியாக பிரிந்து, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், ஓட்டளிக்கும் இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை பார்க்கும் இயந்திரம் ஆகியவற்றை பார்வைக்கு வைக்கின்றனர்.எவ்வாறு ஓட்டளிக்க வேண்டும் என்பதை, வருவாய் துறையினர் அங்கு பொதுமக்களுக்கு விளக்கி வருகின்றனர். காஞ்சிபுரம் மக்கள் குறைதீர் கூட்டம் வெளியேயும், நேற்று, ஓட்டளிக்கும் இயந்திரம் வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X