கணக்கெடுக்கும் பணி துவக்கம்காஞ்சிபுரம்: பிரதமர் அறிவித்த, 6,000 ரூபாய் ஊக்கத்தொகை கிடைப்பதற்கு, சிறு, குறு விவசாயிகளை கணக்கெடுக்கும் பணி துவக்கப்பட்டு உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 13 வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் உள்ளன. இதில், 1 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் உள்ளனர். இவர்களின் விபரம், ஏற்கனவே, வருவாய் துறையில் பதிவாகி உள்ளன.சமீபத்தில், பிரதமர் அறிவித்த, 6,000 ரூபாய் நிதியுதவிக்கு, 5 ஏக்கர் குறைவாக இருக்கும் விவசாயிகளின் பட்டியலை, புள்ளியல், வருவாய், தோட்டக்கலை ஆகிய துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.இதற்காக, கணினி மற்றும் இணைய தள வசதியுடன் கூடிய வட்டாரத்தில் இருக்கும் கல்லுாரிகளை தேர்வு செய்து பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் நிறைவு பெற்ற பிறகு, களப்பணிகள் இருக்கும் என, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.