கூட்டுறவு வங்கி தேர்தல்: ஓட்டுச்சீட்டுகள் கிழிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு வங்கி தேர்தல்: ஓட்டுச்சீட்டுகள் கிழிப்பு

Added : பிப் 12, 2019
Advertisement

வன்முறை மோதலால் தேர்தல் ரத்து
காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி தேர்தலில், ஓட்டுச்சீட்டுகள் கிழிக்கப்பட்டன. இரு தரப்பினர் மோதல் ஏற்பட்டதால், தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் அதிகாரி அறிவித்தார்.சின்ன காஞ்சிபுரத்தில், கூட்டுறவு நகர வங்கி செயல்பட்டு வருகிறது. இதில், 18, ஆயிரத்து 468 உறுப்பினர்கள் உள்ளனர். வங்கி நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தல், கடந்த ஆண்டு நடத்த திட்டமிட்டனர். பல்வேறு காரணங்களால், நிறுத்தப்பட்டது. மீண்டும் தேர்தல் நடத்த, நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, நேற்று தேர்தல் நடந்தது. இதில், மொத்தம், 37 பேர் போட்டியிட்டனர். மதியம் வரை, 491 ஓட்டுகள் பதிவாகின.தி.மு.க., சார்பில், 10 பேர்; அ.தி.மு.க., சார்பில், 10, காங்; 1 பா.ஜ., 1 மற்றவர்கள் சுயேச்சைகளாக போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்காக, நேற்று முன்தினத்தில் இருந்து, தி.மு.க.,வினர் சங்க உறுப்பினர்களிடம், ஓட்டு சேகரித்து வந்தனர். அ.தி.மு.க., வினர் அதற்கான முயற்சி செய்யவில்லை.இதனால், நேற்று காலையில் இருந்து, தேர்தல் நடக்கும் இடத்தில், தி.மு.க.,வினர் மட்டுமே காண முடிந்தது. இந்த தேர்தலில், தி.மு.க.,வினருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்தது.இந்நிலையில், நேற்று மதியம், அ.தி.மு.க.,வினர், வாலாஜாபாத் கணேசன் மற்றும் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஓட்டுச்சாவடிக்கு சென்றனர். சிறிது நேரத்தில், ஓட்டுச்சாவடியில் இருந்த ஓட்டுச்சீட்டுகளை கிழித்து எரிந்தனர்.இதனால், இரு கட்சியினருக்கும் தகராறு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர். பின், தேர்தல் நடந்த அறைகளை போலீசார் பூட்டினர். உள்ளே யாரும் செல்லாதபடி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டன. மாலை வரை இரு கட்சியினரும், அந்த இடத்தில் காத்திருந்தனர்.மாலை, 5:00 மணிக்கு, தேர்தல் வன்முறையால் நிறுத்தி வைக்கப்படுகிறது என, மாவட்ட கூட்டுறவு பதிவாளரும் தேர்தல் அதிகாரியுமான வேணு, உத்தரவுபடி அறிவிப்பு ஒட்டி சென்றனர். இதனால், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X