கே.கே.புதுார் தடுப்பணை குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கே.கே.புதுார் தடுப்பணை குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்பு

Added : பிப் 12, 2019
Advertisement

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்துள்ள, கே.கே.புதுார் அருகே, கிளியாற்றில் உள்ள தடுப்பணை குறித்து, விவசாயிகளிடம் கருத்து கேட்டனர்.மதுராந்தகம் அடுத்துள்ளது கே.கே.புதுார். இங்குள்ள கிளியாற்றுப் பகுதியில், 2015ல், உலக வங்கி நிதியுதவியுடன், 4.5 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டது. இதனால், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகள் பயன்பெற்று வந்தனர்.இந்நிலையில், இந்த தடுப்பணையை ஆய்வு செய்ய, நேற்று அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று வந்திருந்தது. காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் கோல்டி பிரேமாவதி தலைமையில், ஐவர் அடங்கிய குழு, இந்த தடுப்பணை குறித்து, வீராணக்குன்னம், லட்சுமிபுரம், இருசன்ன நல்லுார் உட்பட சுற்று வட்டார கிராம விவசாயிகளிடம், கருத்துகளை கேட்டனர்.இந்த தடுப்பணை, 800 ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததாக விவசாயிகள் கூறினர்.தடுப்பணையால் மழைக்காலங்களில் நீர் வீணாவது தடுக்கப்பட்டதோடு, நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து காணப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.ஆனால், தற்போது, கிளியாறும், தடுப்பணையைச் சுற்றியுள்ள பகுதிகளும் துார்ந்திருப்பதால் துார் வாருவது மிக அவசியம் எனவும் அவர்கள், அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X